நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி ஓவரில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த யாஸ் தயாலை சந்தித்தது குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் இயான் பிஷப் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் அந்த ஓவரை யாஸ் தயால் வீச வந்தார். சிறப்பாக அந்த ஓவரை வீசிய அவர் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆர்சிபி அணியை இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். மேலும் தோனியின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
யாஸ் தயாலின் சோகம்
அதே சமயத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் கடைசி ஓவரில் ரிங்கு சிங்குக்கு தொடர்ந்து 5 சிக்ஸர்கள் கொடுத்து கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் கேலி செய்யப்பட்ட ஒரு வீரராக இருந்தார். அந்த நேரத்தில் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ரவி சாஸ்திரி அதை அவருடைய பாணியில் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடமும் இதை விட மிக முக்கியமான பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கான போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இறுதி ஓவரின் அபாரமாக வீசி தோனியின் விக்கெட்டை கைப்பற்றி, ஆர்சிபி அணியை ப்ளே ஆப் சுற்றுக்கு கூட்டிச்சென்றார். இந்த வருடம் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு ஏறக்குறைய அதே போல ஒரு போட்டியில் சாதித்து ஆர்சிபி அணியை 16 புள்ளிகள் எட்ட வைத்திருக்கிறார்.
சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பாதது
யாஸ் தயால் குறித்து பேசி உள்ள இயான் பிஷப் கூறும் பொழுது ” இந்த இளைஞனுக்காக நான் ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். அவரை நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு ஷாப்பிங் மாலில் பார்த்தேன். அவர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அவரிடம் இந்த சீசன் எப்படி போகிறது என்று கேட்டேன். அவர் இந்த சீசனில் தன்னுடைய பந்துவீச்சு சிறப்பாக இல்லை என்று வருத்தத்துடன் கூறினார். நான் அவரிடம் கூறியது ஒன்றுதான், இரண்டு வருடங்களுக்கு முன்னால் ரிங்கு சிங் சம்பவத்திற்குப் பிறகு, நீங்கள் சிறந்து விளங்க ஒவ்வொரு கிரிக்கெட் வர்ணனையாளரும் உதவுகிறார்கள் என்று சொன்னேன். உடனே அவர் ஆமாம் சார் இது உண்மை என்று சொன்னார்”
இதையும் படிங்க : தோனி கேப்டன்ஷியில் இதையெல்லாம் மோசமா செய்யறார்.. ஆனா விமர்சிக்க மனசு வரல – கில்கிறிஸ்ட் பேட்டி
“நான் அடுத்து சொல்லப்போவது சிஎஸ்கே ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். நான் யாஸ் தயாலின் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரிங்கு சிங் சம்பவத்தில் ரவி சாஸ்திரியை யாஸ் தயால் மிகவும் அனுபவித்து இருந்தார். எனவே அழுத்தத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கு இது மிகவும் நல்ல மீட்பு” என்று கூறியிருக்கிறார்.






