டி20 உலகக் கோப்பை 2024

இஷான் கிஷான், சூர்யானு பேசிட்டே இவரை மறந்து விடுறோம்.. முக்கியமான போட்டியில் சத்தமே இல்லாம சம்பவம் பண்றாரு – இர்பான் பதான்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன டி20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து இந்தியா தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பகான் என்ற தொடரில் முக்கியமான சமயங்களில் சிறப்பாக விளையாடும் வீரர் கவனிக்கப்படாமல் போவது குறித்து சில முக்கிய விஷயங்கள் கூறியிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. இதில் அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 77 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விரைவாக வெளியேற, இறுதிக்கட்டத்தில் சிவம் தூபே தன் அதிரடியை காட்டினார்.

17 பந்துகளை எதிர் கொண்ட அவர் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 27 ரன்கள் குவித்து இந்திய அணி ரன்கள் உயர உதவினார். இக்கட்டான சூழ்நிலையில் சிவம் துபே எப்போதுமே குறிப்பிடத்தக்க பங்களிப்பை பயன்படுத்தி வருகிறார். T20 உலகக் கோப்பையில் இறுதி ஆட்டத்தில் அதிரடியை காட்டிய அவர் ஆசிய கோப்பை இறுதி போட்டியிலும் தன் அதிரடியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இது குறித்து இர்பான் பதான் பேசும்போது “மிகவும் சிறப்பாக விளையாடிய இன்னொரு பேட்ஸ்மேன் இருக்கிறார், அவர் பெரும்பாலும் கவனிக்காமல் போய்விடுவார். அவர் அதிக கவனத்தை பெற மாட்டார். அது ஆசிய கோப்பை இறுதி போட்டியில் சிவம் துபே, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சிவம் துபே நேற்றைய பாகிஸ்தான் போட்டியில் அவர்தான் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு எப்போதுமே சிறிது நேரம் பிடிக்கும். எப்போது களம் இறங்கினாலும் ஒரு பயனுள்ள கேமியோவை விளையாடி விடுவார். அவரது ஹிட்டிங் திறன் மிகவும் அபாரமானது. இந்திய அணி 175 ரன்கள் எட்டிய சமயத்தில் பாகிஸ்தான் அணியிடம் போதிய ஃபயர் பவர் இல்லாததால் தான் விரிவாக ஆட்டமிழந்தது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by