ஐபிஎல் 2025.. இதுக்கு போட்டி வச்சா.. சிஎஸ்கே தான் நிச்சயமா சாம்பியன் ஆகும் – இர்பான் பதான் பேச்சு

0
327
CSK

நடப்பு ஐபிஎல் தொடர் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக நடத்தப்பட்டால் நிச்சயமாக சிஎஸ்கேதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என இர்பான் பதான் கூடியிருக்கிறார்.

சிஎஸ்கே வின் ஐபிஎல் வரலாற்றில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது வீரர்களின் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பிளேயிங் லெவன் ஒவ்வொரு போட்டிக்கும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு சிஎஸ்கேவுக்கு மிகவும் மோசமான சீசனாக அமைவது 95% உறுதியாகி இருக்கிறது.

- Advertisement -

செட் ஆகிவிட்ட சிஎஸ்கே

அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் முதல் ஐந்து இடங்களில் கேப்டன் ருதுராஜ், ஆயுஸ் மத்ரே, உர்வில் படேல் டீவால்ட் பிரிவஸ் மற்றும் சிவம் துபே என மிகவும் திறமையான சரியான வீரர்கள் இடம் பெறுவார்கள். இந்த வகையில் பார்க்கும்பொழுது சிஎஸ்கேவின் பேட்டிங் யூனிட் செட் ஆகிவிட்டதாகவே தெரிகிறது .

மேலும் ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேந்திர சிங் தோனி விளையாடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் ஆறாவது இடத்தை இப்பொழுது சாம் கரனுக்கு தர முடியும். இல்லையென்றால் அடுத்த மினி ஏலத்தில் கேமரூன் கிரீன், ப்யூ வெப்ஸ்டர், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாப்மேன் இந்த வீரர்கள் யாரையாவது வாங்கியும் வைக்கலாம். எனவே சிஎஸ்கே அணி இந்த ஆண்டு போல அடுத்த ஆண்டு பலவீனமாக இருக்காது என்பது உறுதி!

- Advertisement -

சிஎஸ்கேதான் சாம்பியன் ஆகும்

ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல் முறையாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அது இந்திய வீரர்களாக இருக்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்டு விட்டதால், சிறந்த வீரர்கள் ஏலத்திற்கு வர மாட்டார்கள். இதன் காரணமாக அடுத்த ஆண்டு மினி ஏலத்திற்கு செல்வதற்கு முன்பாகவே, தோனி உள்ளே வந்து புத்திசாலித்தனமாக வீரர்களின் காயத்திற்கு மாற்று வீரர்களை கொண்டு வந்து அணியின் ஓட்டையை அடைத்து விட்டார். இதனால் எக்கச்சக்க மாற்றங்கள் நடந்திருக்கிறது.

இதையும் படிங்க : 10 வருஷத்துல சிஎஸ்கே செஞ்ச உருப்படியான விஷயம்.. கெயில் மாதிரி 3 பேர்ல இந்த பையன் வரப்போறார் – டாம் மூடி பேச்சு

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” இந்த சீசன் சிஎஸ்கே அணிக்கு ரீப்ளேஸ்மெண்ட் சீசனாக அமைந்திருக்கிறது. இதற்காக தொடர் நடத்த இருந்தால் சிஎஸ்கே அணிதான் சாம்பியன் ஆகியிருக்கும். அதே சமயத்தில் இப்பொழுது சிஎஸ்கே அணி உள்ளே கொண்டு வந்திருக்கும் வீரர்கள் இந்த அணிக்காக நீண்ட காலம் விளையாட கூடியவர்களாக இருப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -