இந்திய கிரிக்கெட்

சிட்னியில் அந்த வரலாறு திரும்ப போகிறது.. ஆஸி அந்த விஷயத்தில் கை வைக்கும் – இர்பான் பதான் கருத்து

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எந்த முறையில் களம் இறங்கும்? என்றும் ஆஸ்திரேலியா அணி என்ன மாதிரியான திட்டத்தில் வரும்? என்றும் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் தொடரை சமன் செய்யும். மேலும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் தக்க வைக்கும். ட்ரா அல்லது போட்டியை வென்றால் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறும்.

சிட்னி மைதானத்தின் வரலாறு

ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் சிட்னி மைதானம் மற்ற எல்லா மைதானங்களையும் விட சுழல் பந்து வீச்சுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பை கொடுக்கும். எனவே இந்திய அணிக்கு இங்கு நல்ல சாதகமான நிலைமை காணப்படும் என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது.

அதே சமயத்தில் சிட்னி மைதானத்தில் கடைசி ஏழு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் நான்கு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன. முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் இங்கு பெரிய ரன்கள் வரும் என்பதால் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே ஆஸ்திரேலியா அணி போட்டியை குறைந்தபட்சம் டிரா செய்ய இந்த மைதானம் அவர்களுக்கு உதவி செய்வதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் யுக்தி

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறும்பொழுது “சிட்னியில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளருக்கு பெரிய வேலை இல்லை.”

இதையும் படிங்க : அவர் ஒருத்தர் மட்டுமே சமரசமாக போனார்.. அணிக்காகவே நான் அந்த முடிவை எடுத்தேன் – ரோகித் சர்மா விளக்கம்

“இந்த மைதானத்தைப் பொறுத்தவரையில் வரலாறாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகம் அதிகம் இருக்கிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் ஆடுகளத்தில் அதிகமாக புல் இருக்கும்படி செய்யலாம். இப்படி இருந்தாலும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை. ஒருவேளை புல் இல்லாவிட்டால் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் கூட செல்லலாம். இந்திய அணியில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் போதுமானது. சிட்னியில் சுழல் வரலாறு திரும்பப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts