ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆச்சரியப்படும் விதமாக எதிர்கால வீரராக பார்க்கப்படும் கில்லை நீக்கியது ஏன் என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டி அளித்திருக்கிறார்.
தற்போது ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்பது இன்னும் முடிவாகாத நிலையில் இருந்து வருகிறது. மேலும் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தற்போது செய்திகள் தெரிவிக்கிறது. இந்த நிலையில் அவருடைய இடத்தில் கில் விளையாடுவார் என்று தெரிகிறது.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு ஐந்து நாட்களும் ஆடுகளம் சாதகமாக இருந்த நிலையில், முழுமையான பேட்ஸ்மேன் கில் பேட்டிங்கில் தரக்கூடிய தாக்கத்தை ஒரு பந்து வீச்சு ஆல் ரவுண்டரால் தர முடியாது என சஞ்சய் மஞ்ச் ரேக்கர் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.
மேலும் அவருடைய இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் பேட்டிகள் நல்ல முறையில் செயல்பட்டிருந்தாலும் கூட பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர் மிகவும் குறைவான ஓவர்களே பந்து வீசி இருந்தார். இதன் காரணமாக ரோகித் சர்மா கில்லை நீக்கியது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி கொண்டு இருந்தது. இந்த நிலையில் அவர் இதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.
நீக்கியதற்கான காரணம் இதுதான்
இதுகுறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறும் பொழுது “நாங்கள் இல்லை நீக்கவில்லை என்பதை அவருடனான உரையாடலில் அவர் புரிந்து கொண்டார். நாங்கள் பந்துவீச்சில் இன்னும் கொஞ்சம் நல்ல வசதியுடன் இருக்க விரும்பினோம். அதே சமயத்தில் எங்களுக்கு பந்துவீச்சு தேவைப்படும் அளவுக்கு பேட்டிங் ஆழமும் தேவைப்பட்டது. இதன் காரணமாகவே நாங்கள் இரண்டுக்கும் சேர்த்து வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்தோம்”
இதையும் படிங்க : விராட் கோலி பிளான் பண்ணி சண்டை இழுக்கிறார்.. அதுக்கான காரணம் இதுதான் – ஆரோன் பின்ச் பேட்டி
“இதை கில் சரியாக புரிந்து கொண்டு எங்களுடன் சமரசமாக சென்றார். நாங்கள் அவர் சரியாக பேட்டிங் செய்யவில்லை ரன்கள் எடுக்கவில்லை என்று நீக்க கிடையாது. டீம் காம்பினேஷன் எங்களுக்கு வேறு மாதிரியாக தேவைப்பட்டது. இதன் காரணமாகவே நாங்கள் கில்லை விளையாட வைக்க முடியவில்லை. இதை அணியின் நலனுக்காகவே நான் முடிவு செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.






