பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களிடம் களத்தில் மோசமாக நடந்து கொண்டு குழப்பத்தை விளைவித்தால் அதை சும்மா விடமாட்டோம் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது சுற்று போட்டி என்பது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஷாகின் மற்றும் ஹாரிஸ் இருவரும் இந்திய வீரர்களுடன் வாய் தகராறில் ஈடுபட்டார்கள். மேலும் பர்கான் அரைசதம் அடித்து துப்பாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “இந்தியா வெற்றிப்பெறுகிறது முன்னேறுகிறது. இதுதான் இந்தியாவின் மாயாஜாலம். ஆனால் நேற்று களத்தில் நிறைய ஆக்ரோஷத்தையும் கேலி பேச்சுகளையும் பார்க்க முடிந்தது. அதாவது சொல்லக்கூடாத வார்த்தைகளால் பேசினார்கள் என அபிஷேக் சொல்லும் அளவுக்கு நிலைமை இருந்திருக்கிறது. இதனால் தான் நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கிறோம் என்று சொல்கிறேன்”
“இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்படியான விஷயத்தால் ஒருபோதும் பாதிக்கப்படுவது கிடையாது. நீங்கள் பாகிஸ்தானோ அல்லது ஆஸ்திரேலியாவோ யாராக இருந்தாலும் எங்களிடம் களத்தில் இப்படி செய்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம். அது எங்களுடைய பேட் மற்றும் பந்தின் மூலமாக கொடுப்போம்”
“அதே சமயத்தில் நீங்கள் எங்களுடன் குழப்பத்தை விளைவித்தால் நாங்கள் சும்மா விடமாட்டோம். இதுதான் எங்களுடைய விதி. பர்கான் என்ன மாதிரியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையே என்ன நடக்கிறது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தும் நீங்கள் அப்படியான கொண்டாட்டத்தை செய்தீர்கள்”
இதையும் படிங்க : வாயில ஆடுறதில் போட்டி வச்சா பாகிஸ்தான் தான் ஜெயிக்கும்.. இந்தியாவுக்கு வேற வேணும் – ஹர்பஜன் சிங் கருத்து
“ஹாரிஸ் ரவுப் இந்தப் பையன் சரியா இருக்கான் அப்படினு நினைச்சேன். ஆஸ்திரேலியாவில் நாங்கள் பேசிக் கொள்ளும் பொழுது மிகவும் நன்றி உணர்வுடன் பேசினான். நேற்று அவர் நடந்து கொண்ட அந்த விதம் தேவையில்லாதது. இந்த ரெண்டு பேரும் எப்படி நடந்துக்கிட்டாங்கனு பாரக்க, அவர்களுடைய வளர்ப்பு மற்றும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது தான் தெரிகிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.