“நாங்க தோற்றால் மகிழ்ச்சியா?.. கீ போர்டு வீரர்கள்” – பாக் ரசிகர்களுக்கு இர்ஃபான் பதான் பதிலடி

0
162
Irfan

நேற்று தென் ஆப்பிரிக்காவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட அண்டர் 19 உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சரியாக விளையாடி 253 ரன்கள் சேர்த்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 174 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக டாஸ் வென்று பேட்டிங் செய்தது. பொதுவாக அந்த மைதானத்தின் புள்ளி விபரங்கள் முதலில் பந்து வீசுபவர்களே அதிக வெற்றி வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று காட்டியது.

மேலும் பந்து வீச்சுக்கு சாதகமான நிலைமை இருந்தது. இதையெல்லாம் தாண்டி ஆஸ்திரேலியா இந்த முடிவை எடுத்து வென்றும் காட்டி இருக்கிறது. அவர்கள் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கினார்கள்.

இந்திய அணியை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த வெற்றிக் கூட்டணியை கலைக்க விரும்பவில்லை. இதன் காரணமாக இந்திய அணி இரண்டு பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து களம் இறங்கியது.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கினார்கள். விக்கெட் எடுத்தது மட்டும் இல்லாமல் அவர்கள் ரன் அழுத்தத்தை கூட்டினார்கள். இதுவே விக்கெட் இழக்க காரணமாக அமைந்தது.

ஆஸ்திரேலியா அணி அரைஇறுதியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தது. ஆனால் இந்த நிலையிலும் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தியாவின் தோல்வியை கேலி செய்தும் மகிழ்ச்சி வெளிப்படுத்தியும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க : INDvsENG.. 3வது டெஸ்ட்.. நாளை வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. முக்கிய மாற்றங்கள்

இதற்கு பதிலடி தரும் விதமாக இர்ஃபான் பதான் கூறுகையில் ” அவர்களின் அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றாலும் கூட, எல்லை தாண்டி இருக்கும் கீபோர்டு வீரர்கள், நமது இளைஞர்களின் தோல்வியில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த எதிர்மறையான அணுகுமுறை, அவர்கள் மனநிலையை மோசமாக பிரதிபலிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.