பும்ரா நேத்து இத செஞ்சத கவனிச்சிங்களா?.. இதத்தான் அகமதாபாத்தில் பாகிஸ்தான் கூட செஞ்சாரு – இர்பான் பதான் விளக்கம்

0
277
Irfan

ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று மிக முக்கியமான போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா அசத்தலான பந்துவீச்சு செயல்பாட்டில் இந்திய அணிக்கு வெற்றி கொடுத்தார்.

நேற்று அவர் பாகிஸ்தான் பேட்டிங்கில் முதல் விக்கெட்டாக பாபர் அசாம் விக்கெட்டை கைப்பற்றி, அடுத்து சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் மற்றும் பினிஷர் இப்திகார் அகமது என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்தார். இந்திய அணியின் வெற்றியில் இது மிக முக்கிய பங்கை வகித்தது.

- Advertisement -

நேற்று பும்ரா செயல்பாடு பற்றி இர்பான் பதான் பேசும் பொழுது “பும்ரா நேற்று பந்து வீச வருவதற்கு முன்னால் அவரை நான் இந்திய அணியின் பேங்க் என்று சொன்னேன். அவர் அவ்வளவு பாதுகாப்பானவராக இருக்கிறார். அவர் எவ்வளவு சிறந்தவர் என்று எல்லோருக்கும் தெரியும். அவருடைய லைன் மற்றும் லென்த் இந்திய அணியை போட்டியில் வைத்திருக்கும்.

அவர் விளையாட்டில் கொண்டு வரும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் பற்றி எல்லோரும் நிறைய பேசுகிறார்கள். ஆனால் அவருடைய சிறப்பான மனநிலைப் பற்றி யாரும் பேசுவதில்லை. நீங்கள் பந்து வீச விரும்பினால் பும்ராவை பின்பற்றி அவருடைய லைன் மற்றும் லென்த்தில் வீசினால் போதும். இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் வரலாற்றில் அவர்தான் தலைசிறந்த பந்துவீச்சாளர்.

உண்மையில் இதற்கு நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷபீக் பும்ரா பேசிய ஒரு ஃபுல் லென்த் பந்தில் பவுண்டரி அடித்தார். அதற்குப் பிறகு 9 ஓவர்களில் பும்ரா ஒரு ஃபுல் லென்த் பந்து கூட வீசவில்லை. பேக் ஆப் த லென்த்தில்தான் வீசினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இனிமே எங்க பேட்ஸ்மேன்கள்தான் அத முடிவு செய்யணும்.. தானா கெடுத்துக்கிட்டாங்க – கோச் கேரி கிரிஸ்டன் பேச்சு

இன்றும் கூட பும்ரா யார்க்கர்களை பேசவில்லை. அவர் ஆடுகளத்தை பயன்படுத்திதான் வீசினார். ஏனென்றால் ஆடுகளத்தில் உதவி இருந்தது. மேலும் மைதானமும் பெரியதாக இருந்தது. இதுதான் அவருடைய மூளையின் பலம். இதனால்தான் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்” என்று கூறி இருக்கிறார்.