இனிமே எங்க பேட்ஸ்மேன்கள்தான் அத முடிவு செய்யணும்.. தானா கெடுத்துக்கிட்டாங்க – கோச் கேரி கிரிஸ்டன் பேச்சு

0
678
Kirsten

நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் பந்துவீச்சில் முதலில் மிகச் சிறப்பாக இருந்து, பிறகு பேட்டிங்கில் முதல் பகுதியிலும் சிறப்பாக இருந்து, இறுதியாக பரிதாபகரமான முறையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

இந்திய அணி பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது. பவர் பிளேவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்து ஆச்சரியப்படுத்தியது. மேலும் 89 ரன்களுக்கு இந்திய அணி 13 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து சிறப்பான நிலையில் இருந்தது.

- Advertisement -

ஹாரிஸ் ரவுப் வந்து வீச்சில் சூரியகுமார் விக்கெட்டை கொடுக்க, அங்கிருந்து இந்தியா அணி வெறும் 30 ரன்கள் மட்டும் சேர்த்து 19 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கூடுதலாக இந்திய அணிக்கு இன்னும் ஒரு 20 ரன்கள் வேண்டும் என எல்லோரும் நினைத்திருந்த வேளையில் தான் இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டியது.

பாகிஸ்தான் அணி 12 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. அங்கிருந்து அந்த அணிக்கு 42 பந்தில் 42 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் இருந்துதான் பாகிஸ்தான் அணி 113 ரன்கள் மட்டுமே 20 ஓவர்களில் எடுத்து ஆறு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் பேசும்பொழுது “இவர்கள் அனைவரும் சர்வதேச வீரர்கள். இவர்கள் சிறப்பாக செயல்படாத பொழுது இவர்களுக்கு அழுத்தம் வெளியில் இருந்து வரும் என்று நன்றாகத் தெரியும். இது புரிந்து கொள்ளக் கூடியதுதான். இவர்களில் பலரும் வெளியில் உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய ஆட்டத்தை எப்படி முன்னோக்கிக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதை இவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : இதே ஆளுங்கதான் போன வருஷம் என் கதை முடிஞ்சுதுனு சொன்னாங்க.. என் பாணி இதுதான் – பும்ரா சிறப்பு பேட்டி

ரன் துரத்தும் பொழுது சிங்கிள்ஸ் எடுக்கவும், லூஸ் டெலிவரி கிடைத்தால் பவுண்டரி தேடவும் சொல்லப்பட்டது. பந்துக்கு பந்து என்ற நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. எல்லாமே மிகச் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் பதினைந்தாவது ஓவரில் இருந்து எல்லாம் மாறியது. அங்கிருந்து நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இதன் காரணமாக பவுடண்ரிகள் தேவைப்பட்டது. இது கடினமான ஒன்று. நாங்கள் முதல் 15 ஓவர்களில் என்ன செய்தோமோ அதையே செய்திருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.