இந்தியாவுல இப்படியொரு பிட்ச் இருந்தா என்ன நடக்கும் தெரியுமா?.. இது உ.கோ-யே கிடையாது – இர்பான் பதான் விமர்சனம்

0
117
Irfan

ஐசிசி ஒன்பதாவது டி20 உலக கோப்பைத் தொடர் தற்பொழுது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. மேலும் கிரிக்கெட்டுக்கு மிகவும் புதிய நாடான அமெரிக்கா டி20 உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்துகிறது. தற்பொழுது அமெரிக்க நியூயார்க் ஆடுகளம் பற்றி இர்பான் பதான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ஐசிசி கிரிக்கெட் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் தன்னுடைய பணியில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. இதற்காக நியூயார்க் நகரில் புதிய மைதானத்தை ஒரு வருடத்திற்குள் கட்டி திறந்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நியூயார்க் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆடுகளம் 5 மாதங்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆடுகளத்தில் பவுன்ஸ் கண்டபடி இருக்கிறது. சில நேரங்களில் தாழ்வாக வருகிறது சில நேரங்களில் எதிர்பார்க்காத அளவிற்கு பந்து எகிறுகிறது.

இதனால் இங்கு பெரிய ரன்கள் வருவது கிடையாது. குறிப்பாக இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 77 ரன்களில் சுருண்டது. நேற்று அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 96 ரன்களில் சுருண்டது.

பெரிய ஸ்கோர்கள் வரவில்லை என்பதோடு, சீரற்ற பவுன்ஸ் இருக்கின்ற காரணத்தினால் வீரர்களுக்கு பெரிய அளவில் அடிபடுகிறது. நேற்று ரோகித் சர்மா கையில் அடிபட்டு அரைசதம் அடித்ததோடு வெளியேறினார். மேலும் ரிஷப் பண்ட் தன்னுடைய கை மூட்டு எலும்பில் அடி வாங்கினார். இதெல்லாம் வீரர்களுக்கு மிகப்பெரிய காயத்தை கொண்டு வந்து அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடக்கும் அளவுக்கு மோசமானது.

- Advertisement -

இதையும் படிங்க : இதான்டா ஆஸ்திரேலியா.. கம்மின்ஸ் செய்த 2 காரியம்.. உலகம் முழுக்க ரசிகர்கள் பாராட்டு.. நெகிழ்ச்சி சம்பவம்

தற்போது இது குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும் பொழுது “கண்டிப்பாக அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் நியூயார்க் மைதான ஆடுகளம் வீரர்களுக்கு நிச்சயம் பாதுகாப்பானது கிடையாது. இந்தியாவில் மட்டும் இப்படி ஒரு ஆடுகளம் இருந்தால், மீண்டும் அந்த மைதானத்தில் போட்டி நடப்பதற்கு வெகு காலம் ஆகும். இந்த ஆடுகளம் கண்டிப்பாக நன்றாக இல்லை. நாம் டி20 உலகக்கோப்பை பற்றி பேசுகிறோம். ஆனால் இது இரு நாடுகளுக்கு இடையே ஆன தொடர் போல கூட இல்லை” என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.