இதான்டா ஆஸ்திரேலியா.. கம்மின்ஸ் செய்த 2 காரியம்.. உலகம் முழுக்க ரசிகர்கள் பாராட்டு.. நெகிழ்ச்சி சம்பவம்

0
1020
Cummins

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் ஒமான் அணிக்கு எதிராக இன்று விளையாடி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாட் கம்மின்ஸ் செய்த காரியம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் கேப்டனாக பாட் கம்மின்சை நியமிக்கவில்லை. அவருக்கு பதிலாக மிட்சல் மார்சை புதிய கேப்டனாக கொண்டு வந்தது. இது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

ஏனென்றால் ஒரே ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர என இரண்டையும் வென்ற ஒரே கேப்டனாக உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் இருந்தார். ஆனாலும் டி20 கிரிக்கெட் வேறு விதமானது என்பதால், அணியின் காம்பினேஷனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவர் கேப்டனாக இருந்தால் அவரை எல்லா போட்டியிலும் விளையாட வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி நடப்பு டி20 உலகக்கோப்பையில் இன்று தனது முதல் போட்டியில் ஒமான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிகள் வேகப்பந்துவீச்சாளர்களாக மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் நாதன் எல்லீஸ் ஆகியோர் இடம் பெற்றார்கள். பாட் கம்மின்ஸ் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனாக இருக்கும் பாட் கம்மின்ஸ் தனது அணி வீரர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வந்தார். அவர் எந்தவித ஈகோவும் பார்க்காமல் தனது அணியினருக்கு தண்ணீர் பாட்டில் தூக்கியது தற்பொழுது சமூக வலைதளத்தில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் புகழப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சர்மா அடிச்ச அசிங்கமான அரைசதம் இது.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

டி20 உலகக் கோப்பைக்கு தன்னை கேப்டனாக முன் நிறுத்திக் கொள்ளாதது, மேலும் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காத பொழுது, அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சக அணி வீரர்களுக்காக தண்ணீர் கொண்டு சென்றது என, அவர் செய்திருக்கும் இந்த இரண்டு காரியங்கள் பாராட்டை பெறுவதோடு மிகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்திருக்கிறது.