ஆர்சிபி பிளே ஆஃப் விட்டு வெளியே போக காரணம் தினேஷ் கார்த்திக்தான் – இர்பான் பதான் விமர்சனம்

0
250
Irfan

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 8 போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. இதில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்திருக்கிறது. ஆர்சிபி அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இர்பான் பதான் தினேஷ் கார்த்திக்கை விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் எடுத்தது. பிறகு வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் பட்டிதார் அதிரடியில் ஆர்சிபி அணி வெற்றிக்கான முன்னணியில் இருந்தது. ஆனால் இதற்கு அடுத்து ரசல் மற்றும் நரைன் ஓவரில் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது ஆர்சிபி அணிக்கு களத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் கரன் சர்மா இருவரும் இருந்தார்கள். இந்த நிலையில் ரசல் வீசிய 19ஆவது ஓவரில் கரண் சர்மாவை நம்பி தினேஷ் கார்த்திக் சிங்கிள் ரன் இரண்டு முறை எடுக்கவில்லை. மேலும் அதே ரசல் ஓவரில் அவர் ஆட்டமும் இழந்தார்.

இதற்கடுத்து ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, கரன் சர்மா மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு போட்டியை பரபரப்பாக்கினார். ஆனாலும் இறுதிக் கட்டத்தில் ஒரு பந்துக்கு மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி பரிதாபமாக தோற்று, ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பையும் இழந்துவிட்டது.

இதுகுறித்து இர்ஃபான் பதான் கூறும்பொழுது “நாம் எல்லோருமே நேற்று விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட அவுட், ஆர்சிபி அணியின் தோல்வியில் எவ்வளவு பங்கு வகிக்கிறது என்பது குறித்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் கொஞ்சம் உற்று நோக்கினால் தினேஷ் கார்த்திக்தான் தோல்விக்கு காரணம் என்று புரிந்து கொள்ளலாம். ரசல் ஓவரில் இரண்டு முறை சிங்கிள் எடுக்க வாய்ப்பு இருந்தும் தினேஷ் கார்த்திக் எடுக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி அவுட் சர்ச்சை ஒரு க்ரே ஏரியா.. ஆர்சிபி-க்கு அம்பயர்கள் இதை செஞ்சே இருக்கனும் – ரீஸ் டாப்லி பேச்சு

அவர் தன்னுடைய பேட்டிங் பார்ட்னர் கரன் சர்மாவை நம்பவில்லை. ஆனால் கரன் சர்மா நல்ல முறையில் பேட்டிங் செய்யக்கூடியவர். கடைசியில் ரசல் ஓவரில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டையும் கொடுத்துவிட்டார். பின்பு ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் கரன் சர்மா மூன்று சிக்ஸர்கள் அடித்தார். நேற்று இதைப் புரிந்து கொள்ள தினேஷ் கார்த்திக் தவறிவிட்டார். இதன் காரணமாக ஆர்சிபி அணி பிளே ஆப் வாய்ப்பில் இருந்தும் வெளியே சென்று விட்டது” என்று விமர்சித்திருக்கிறார்.