ஹர்திக் பழைய மாதிரி வர.. கிரீஸில் டெக்னிக்கலா இத மட்டும் செஞ்சா போதும் – இர்பான் பதான் அறிவுரை

0
63
Hardik

நடப்பு ஆண்டு ஹர்திக் பாண்டியாவுக்கு கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து கேப்டன் பொறுப்பை பெற்றது அவருக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இர்ஃபான் பதான் அவருக்கு மிக முக்கியமான அறிவுரை ஒன்றைக் கூறி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக வந்ததிலிருந்து அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்பாடு இரண்டும் மிக சுமாராக இருந்தது. அவரால் கேப்டன்சி பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி பெற்று தர முடியவில்லை.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பேட்ஸ்மேன் ஆக சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சிகள் செய்தார். ஆனால் அவரால் பழைய முறையில் அதிரடியாக விளையாட முடியவில்லை. குஜராத் அணிக்காக அவர் பேட்டிங்கில் செய்து கொண்ட சில மாற்றங்கள் அவருடைய பேட்டிங்கை தற்பொழுது அதிரடியாக விளையாட விடாமல் செய்திருக்கிறது.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் இர்ஃபான் பதான் கூறும் பொழுது “தற்பொழுது ஹர்திக் பாண்டியாவின் அடிக்கும் திறமை குறைந்துவிட்டது என்பதை நாம் பார்க்கிறோம். அவர் பேட்டிங்கில் மேல் வரிசையில் வந்து விளையாட விரும்புகிறார். கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் கிரீசில் பேட்டிங் செய்ய நிற்கும் பொழுது நேராக நிற்கிறார். நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதற்காக இவ்வாறு அவர் இருக்கிறார்.

இதுவே முன்பு அவரை எடுத்துக் கொண்டால் அவர் கிரீசில் கால்களை விரித்து நல்ல பரந்த தன்மையுடன் நிற்பார். இதன் காரணமாக பந்தை அடிப்பதற்கு அவருக்கு நல்ல அடித்தளம் கிடைக்கும். ஹர்திக் பாண்டியா மீண்டும் பழைய முறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவர் எந்த முறையில் பேட்டிங் செய்ய விரும்புகிறார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க: நாங்க 6 பேர் இருக்கோம்.. அதுல யாராவது ஒருத்தர் இதை செஞ்சா போதும்.. நாங்கதான் கிங் – டேவிட் வார்னர் பேட்டி

ஐபிஎல் தொடரின் கடைசிப் பகுதியில் அவரது பந்து வீச்சு நன்றாக இருந்தது. அவரது பந்துவீச்சு நன்றாக அமைந்தால் அது அவருடைய பேட்டிங் செயல்பாட்டுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும். அவர் ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டராக நம்பிக்கையை பெற்று விட்டால் அவர் பல வகையில் அணிக்கு உதவியாக இருப்பார். இதை செய்தவுடன் அவர் டி20 உலகக் கோப்பையில் முக்கியமான வீரராக மாறிவிடுவார்” என்று கூறியிருக்கிறார்