ஆஸ்திரேலிய அணி 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேடில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரை ஆரோன் பின்ச் தலைமையில் கைப்பற்றியது. அதே சமயத்தில் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் சொந்த நாட்டில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என டேவிட் வார்னர் பேசியிருக்கிறார்.
தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்று நடப்பு சாம்பியன் ஆக இருந்து வருகிறது. இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரையும் கைப்பற்றினால், அந்த அணி ஒரே நேரத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சாம்பியனாக இருக்கும் முதல் அணியாக மாறும்.
மேலும் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு மிட்சல் மார்ஸ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் டேவிட் வார்னர் ஓய்வு பெற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே ஆஸ்திரேலியா அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரை மிகவும் முக்கியமான ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அதிகப்படியாக வெற்றிகளை பெறுவது எப்படி என டேவிட் வார்னர் காரணங்களைக் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து டேவிட் வார்னர் கூறும் பொழுது ” நாங்கள் எப்பொழுதும் அச்சம் என்று விளையாடி வருகிறோம். அதனால் தான் நாங்கள் சில காலமாக தொடர் வெற்றிகளை பெற்று வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அணியில் எங்களுடைய இடத்தைப் பற்றி கவலைப்படுவது கிடையாது. எங்களால் முடிந்ததைச் செய்வதில் அக்கறை கொள்கிறோம். மேலும் நாங்கள் என்ன செய்தாலும் மேட்ச் வின்னர் ஆக இருக்க முயற்சி செய்கிறோம்.
இதையும் படிங்க : 2024 டி20 உலகக்கோப்பை.. பாகிஸ்தான் அயர்லாந்து அணியிடம் தோற்கும்.. இதான் காரணம் – ராபின் உத்தப்பா கருத்து
மேலும் இதில் விஷயம் என்னவென்றால் பல மேட்ச் வின்னர்களை நாங்கள் பெற்று இருக்கிறோம். ஒரு நாளில் ஒரு போட்டியில் யாராவது ஒருவர் மேட்ச் வினர்களாக வருவார்கள். நாங்கள் மேல் வரிசையில் ஒரு ஆறு வீரர்கள் இருக்கிறோம், நாங்கள் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் 60 முதல் 80 ரன்கள் யாராவது ஒருவர் எடுக்கும் பொழுது, அந்த போட்டியில் நாங்கள் அதிக ரன்கள் குவிப்போம் என்பது உறுதி” என்று கூறியிருக்கிறார்.






