இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்கள் விட்டு கொடுத்துள்ளதற்கு முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் அதிருப்தி தெரிவித்தார். பிரசித் இரு இன்னிங்ஸ்களிலும் 35 ஓவர்கள் வீசி 220 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இர்ஃபான், பிரசித் எதிர்காலத்தில் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ப யுக்தியை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து அவரது எகானமியைப் பாருங்கள். வேகப்பந்து வீச்சாளர்களில் மோசமான எகானமி ரேட்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.”
எக்னாமியில் கவனம் செலுத்தனும்:
“பும்ராவுக்கு டி20-ல் இந்த எகானமி உள்ளது, கிட்டத்தட்ட 6.50 எனவே, அவர் தனது எகானமியில் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு நல்ல உயரமும் வேகமும் உள்ளது. பேட்ஸ்மேனுக்கு ஏற்ப நிலையான பகுதியில் பந்து வீசுவதை விரைவில் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய மற்றொரு முன்னாள் வீரர் சபா கரீம், “அவர் நிறைய ரன்கள் விட்டுக்கொடுக்கிறார். இப்படி இருந்தால் பயனில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் சிறப்பாக வீசினார். வெவ்வேறு ஸ்பெல்களில் நன்றாக பந்து வீசினார். இர்ஃபான் கூறியது போல், அவர் தனது லெங்த்தை மாற்றி அதன் பயனை அடைந்தார்.”
3வது மோசமான எக்னாமி:
“இருப்பினும், அவர் இன்னும் அதிகமான லெங்த்தை கொடுக்கிறார் அல்லது சில சமயங்களில் மிகவும் குறுகிய லெங்தில் பந்து வீசுகிறார். இதில் கடுமையாக உழைக்க வேண்டும்,” என்று கரிம் கூறினார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நான்காவது இன்னிங்ஸில் 371 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தனர். குறைந்தபட்சம் 35 ஓவர்கள் வீசிய பந்து வீச்சாளர்களில், பிரசித் 6.28 என்ற மூன்றாவது மோசமான எகானமி ரேட்டை டெஸ்ட் வரலாற்றில் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: இந்தியா, இங்கிலாந்து முதல் டெஸ்ட் எதிரொலி.. ஐசிசி தரவரிசை பட்டியலில் அதிரடி மாற்றம்.. பண்ட், பும்ரா அபாரம்
அடுத்து, தொடரின் இரண்டாவது போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ளது. தோல்விக்கு பிறகு அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பும்ரா, அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதில் ஆர்ஷ்தீப் சிங் அணியில் விளையாடலாம்.






