இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றது. ஆண்டர்சன்- டென்டல்கர் கோப்பையில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 371 ரன்கள் என்ற இலக்கை எட்டி வரலாற்று சாதனையை படைத்தது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக 5 சதம் அடிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி சார்பாக இரண்டு சதம் அடிக்கப்பட்டது. இந்த சூழலில் லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ரிஷப் பன்ட் தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்டர்ஸ்கான தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
ரிஷப் பண்ட் அபாரம்:
அது மட்டுமல்லாமல் டெஸ்ட் தரவரிசை ரேட்டிங்கில் 800 புள்ளிகளை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதேபோன்று பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார்.
அதிரடி வீரர் ஹாரி புரூக், முதல் இன்னிங்சில் 99 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதைப் போன்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்த நிலையில் ஐந்து இடங்கள் முன்னேறி தற்போது புள்ளி பட்டியலில் 20-வது இடத்தை பிடித்திருக்கின்றார்.
ஜடேஜா முதலிடம்:
இதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றார். தொடர்ந்து முதலிடத்தில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இருக்கின்றார். ஆனால் ஜடேஜா இந்த போட்டியில் பெரும் ஒரு விக்கெட்டை மட்டும்தான் வீழ்த்தி இருந்தார்.
இதையும் படிங்க: சேவாக் கிட்ட சிக்கிட்டாரு கில்.. ஸ்டோக்ஸ் முன்னால ரொம்ப குழப்பமா நிக்கறாரு – டேவிட் லாயிட் விமர்சனம்
ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார். பும்ரா லிட் டெஸ்ட் போட்டியின் முதலில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் உள்ளனர்.






