இந்திய கிரிக்கெட்

119 வருட தென் ஆப்பிரிக்க சாதனை.. தூள் தூளாக உடைத்த அயர்லாந்து.. அபார வரலாற்று வெற்றி

தற்போது ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்த அயர்லாந்து அணி ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 119 வருட தென் ஆப்பிரிக்காவின் அபார சாதனை ஒன்றை முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

அயர்லாந்து ஜிம்பாப்வே அணிகள் மோதிய ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் தாசியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி பே ட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு ஆண்டி மெக்பிரைன் 92, மார்க் அடைர் 72 ரன்கள் எடுக்க, அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் முசரபாணி ஏழு விக்கெட் கைப்பற்றினார்.

முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு நிக் வெல்ச் 90 ரன்கள், பந்துவீச்சில் கலக்கிய முசரபாணி 47 ரன்கள் எடுத்தார்கள். ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியின் தரப்பில் மெக்கார்தி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் ஆண்டி பால்பேரின் 66, லார்கன் டக்கர் 58 ரன்கள் எடுத்தார்கள். அயர்லாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 298 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சில் ரிச்சர்ட் நகர்வா 4 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

அயர்லாந்து அணி வரலாற்று வெற்றி

இதைத் தொடர்ந்து 291 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு மாதவேரே மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 84 ரன்கள் எடுத்தார். அந்த 228 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அயர்லாந்து 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

அயர்லாந்து அணி மொத்தம் பத்து டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருக்கிறது. இதில் தனது முதல் ஏழு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரண்டு போட்டியிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் என தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : 8 வருஷம் முன்ன பாகிஸ்தான் கூட நடந்த தப்பு.. நான் விராட் கோலி இன்னும் 2பேர் காரணம் – சஞ்சய் பாங்கர் பேட்டி

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1906ஆம் ஆண்டு தன்னுடைய 14 ஆவது டெஸ்ட் போட்டியின் போது ஹாட்ரிக் டெஸ்ட் வெற்றிகள் பெற்று, குறைந்த டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற அணியாக உலகச் சாதனை படைத்து இருந்தது. தற்பொழுது அயர்லாந்து அணி தனது முதல் 10 டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் வெற்றிகள் பெற்று தென் ஆப்பிரிக்காவின் 119 வருட சாதனையை முறியடித்து அசத்தியிருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: Ire vs Zim