வெறும் 4 பந்து.. தனி ஆளாக ஆசிய சாம்பியனை தோற்கடித்த அயர்லாந்து வீராங்கனை.. இலங்கை மகளிர் அணி வரலாற்று தோல்வி

0
1579

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணி சிறப்பாக விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

அயர்லாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒர்லா ப்ரென்டர்கஸ்ட் சிறப்பாக விளையாடி இலங்கை மகளிர் அணியை தோற்கடித்தார்.

- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் களம் இறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் ஓரளவு சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தனர். இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் விஸ்மி குனார்ட்னே அபாரமாக விளையாடி 98 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்சர்களோடு 101 ரன்கள் குவித்தார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அதிகபட்சமாக மிடில் வரிசை வீராங்கனை ஹாசினி பெரேரா 76 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 46 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனைகள் அனைவரும் வரிசையாக குறைந்த ரன்களில் வெளியேறிக் கொண்டிருந்தனர். இதனால் இலங்கை அணி 50 ஓவர்களில் 260 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி அயர்லாந்து அணி களம் இறங்கியது. இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு எதிராக அயர்லாந்து அணி தோற்றுவிடும் என்றேதான் நினைத்தனர். ஆனால் அயர்லாந்து அணியின் வீராங்கனை ஒர்லா ப்ரென்டர்கஸ்ட் அனைவரது நினைப்பையும் பொய்யாக்கினார். தொடக்க ஆட்டக்காரர் சாரா 30 ரன்களில் வெளியேற, அவருக்குப் பிறகு களம் இறங்கிய எமி ஹண்டர் ஓரளவு நன்றாக விளையாடி 40 ரன்கள் குவித்தார்.

அப்போது களத்தில் இருந்த ஒர்லா இலங்கை அணியின் பந்துவீச்சை சரமாரியாக வெளுத்து வாங்கினார். 107 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 10 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 122 ரன்கள் குவித்து அயர்லாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இவரின் அதிரடியால் அயர்லாந்து அணி 49.2 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு நான்கு பந்துகள் மீதம் வைத்து 261 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:ஒரே நேரத்தில் 2 மும்பை இந்தியன்ஸ் அணிகளின் போட்டி.. வெளியேறிய பொல்லார்ட்.. அபூர்வ நிகழ்வு

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணிக்கு இந்த தோல்வி நம்ப முடியாத வகையில் அமைந்திருக்கிறது.

- Advertisement -