வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த கீரன் பொல்லார்டு, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடி வரும் அவர் தற்போது அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதற்கான அதிகாரப்பூர்வ தகவலை மும்பை இந்தியன்ஸ் அணிதரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. எம்ஐ அணியில் இருந்து பொல்லார்டு ரிலீஸ் செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த கீரன் பொல்லார்டு, வெஸ்ட் இண்டீஸ் அணியை விட இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரால் உலக மக்கள் பலரால் அறியப்பட்ட நட்சத்திர வீரர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். இவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய காட்சி விருந்தாக அமையும்.
அதிலும் சென்னை அணிக்காக விளையாடும் போது, இவரது அதிரடி ஆட்டம் வெகுவாகவே வெளிப்படும். எப்போதெல்லாம் சென்னை அணிக்கு எதிராக விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படி மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய பொல்லார்டு கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
அதற்குப் பதிலாக தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு எஸ்ஏ டி20 லீக் கிரிக்கெட் தொடரில் எம்ஐ கேப்டவுன் அணிக்காக விளையாடி வரும் பொல்லார்டு கடந்த இரண்டு சீசன்களாக எம்ஐ அணியை வழிநடத்திக் கொண்டிருந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கு முன்பாக மும்பை நிர்வாகம் பொல்லார்டை ரிலீஸ் செய்துள்ளது. அதற்கான காரணம் என்னவெனில் அடுத்த வருடம் ஜனவரி 11ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற உள்ள எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக பொல்லார்டு விளையாட உள்ளார்.
இதையும் படிங்க:துலீப் டிராபி.. வாய்ப்பு கிடைக்காத பிளேயர்களின் மாஸ் பிளேயிங் XI.. கோப்பைய குடுங்க
இந்த இந்த சூழ்நிலையில் எஸ்ஏ டி20 தொடரின் 3வது சீசன் ஜனவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு தொடரிலும் ஒரே நேரத்தில் ஒரே அணிக்காக பொல்லார்டு விளையாட முடியாது என்பதால், எம்ஐ நிர்வாகம் எஸ்ஏ டி20 தொடரில் இருந்து இவரை ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வினோத நிகழ்வு ஏற்பட்டுள்ளதால் எம்ஐ கேப்டவுன் அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட பொல்லார்டு எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக விளையாட போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






