இந்திய அணிக்கு எதிரான அயர்லாந்து டி20 அணி அறிவிப்பு.. புதிய கேப்டன்.. ஐபிஎல் நட்சத்திர வீரருக்கு இடம்

0
444
Bumrah

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து, சுற்றுப்பயணத்தின் கடைசி தொடரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று நடந்தது. மீதம் உள்ள நான்கு போட்டிகளும் நடைபெற்று ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்தத் தொடர் முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் பதினெட்டாம் தேதி ஆரம்பித்து 23ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்திய மண்ணில் அக்டோபர் மாதம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்குகிறது. இதற்கு நடுவில் இந்திய அணி அக்டோபர் 30-ம் தேதி இலங்கையில் தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் வடிவிலான ஆசியக் கோப்பையில் விளையாடுகிறது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் போன்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே நீண்ட நாள் கழித்து அணிக்கு திரும்பும் ஜஸ்ட்பிரீத் உம்ரா கேப்டன் ஆகவும், ருதுராஜ் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி
ஜஸ்பிரித் பும்ரா (சி), ருதுராஜ் கெய்க்வாட் (விசி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீ), ஜிதேஷ் சர்மா (வி.கீ), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

தற்பொழுது இந்தத் தொடருக்கான அயர்லாந்து அணியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு மூத்த வீரரான பால் ஸ்டெர்லிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹேரி டெக்டர் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடும் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் லிட்டில் இருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அயர்லாந்து அணி :
பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி, மார்க் அடேர், ராஸ் அடேர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், பியோன் ஹேண்ட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், தியோ வான் வோயர்கோம், கிரேக் யங்.