அயர்லாந்து டி20 தொடர் இந்திய அணி.. பும்ரா கேப்டன்.. 2 சிஎஸ்கே வீரர்களுக்கு வாய்ப்பு.. தமிழக வீரருக்கு ஏமாற்றம்!

0
4316
Bumrah

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறது.

இதற்கு அடுத்து இந்திய அணி ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்கிறது. இதற்கு அடுத்து உள்நாட்டில் நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அக்டோபர் நவம்பர் மாதங்களில் விளையாடுகிறது.

இதற்கு நடுவில் இந்திய அணி ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய மூன்று தேதிகளில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. தற்பொழுது இந்த அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக அணிக்கு திரும்பும் பும்ரா அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு தரப்பட்டு இருக்கிறது. துணை கேப்டனாக ருத்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த டி20 அணியில் காயம் காரணமாக விளையாடாமல் பும்ரா உடன் சேர்ந்து இருந்த மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

மிக முக்கியமாக ரிங்கு சிங்குக்கு இந்திய அணியில் முதல் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஜிதேஷ் ஷர்மா, மும்பை அணிக்கு சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆல்ரவுண்டர்களாக ஆர்சிபி ஷாபாஷ் அகமத் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இருக்கிறார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி :

பும்ரா (கே), ருதுராஜ் (து. கே) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.

இந்த முறை ஐபிஎல் தொடரில் தனது பந்துவீச்சு வேகத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்த தமிழக வீரர் வரும் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கான வாய்ப்பு இந்த முறை மறுக்கப்பட்டு இருக்கிறது.