அயர்லாந்து டி20 தொடர்.. கேப்டன் ஆகும் பும்ரா?.. பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

0
1977
Bumrah

இந்திய அணி தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருக்கிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆக இருக்கிறார். டி20 அணிக்கு ஹரிதிக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார். இதற்கான இந்திய அணிகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் முதலில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 12ஆம் தேதி துவங்குகிறது. இந்தச் சுற்றுப் பயணம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெறும் ஐந்தாவது டி20 போட்டியோடு முடிவுக்கு வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கடுத்து இந்திய அணி மிக முக்கியமான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஒத்திகையாக அமையக்கூடிய ஆசியக் கோப்பை தொடரில் செப்டம்பர் மாதம் விளையாட இருக்கிறது. ஆசியக் கோப்பை பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடத்தப்பட இருக்கிறது. இந்திய அணி இலங்கையில் விளையாடுகிறது.

இதற்கு நடுவில் அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் தொடரின் மூன்று போட்டிகள் ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது.

இதற்கு அடுத்து முக்கியமான ஆசிய கோப்பையும் அதற்கடுத்து அதைவிட முக்கியமான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையும் நடைபெற இருப்பதால். இந்திய அணி நிர்வாகம் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்க விரும்புவதாக தெரிகிறது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு அயர்லாந்துக்கான அணி தேர்வு அமையும் என்று செய்தி வருகிறது.

- Advertisement -

காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஜஸ்ட்ரீத் பும்ரா அயர்லாந்து தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறப்படுகிறது. அப்படி அவரிடம் வரும்போது அவரே கேப்டன் ஆகவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது

இந்த அணிக்கு துவக்க இடத்தில் ருத்ராஜ், ஜெய்ஸ்வால் இருவரும் இடம்பெறுவார்கள். மேலும் விக்கட் கீப்பர்களாக இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இருப்பார்கள். மேலும் ஆல்ரவுண்டர்கள் இடத்தில் திலக் வர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தொடர்வார்கள்.

அயர்லாந்து தொடருக்கான உத்தேச இந்திய அணி விபரம்:

இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், க்ருனால் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, சுயாஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.