ஐபிஎல் பிளே ஆப்ஸ் பைனல் நடக்கும் இடங்கள் அறிவிப்பு; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

0
463
Ipl2023

ஐபிஎல் 16ஆவது சீசன் இரண்டு வாரங்களுக்கு முன்பு துவங்கி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெருந்தொற்றின் காரணமாக கடந்த கடந்த மூன்று வருடங்களில் இரண்டு முறை ஐக்கிய அரபு எமிரேடிலும் ஒரு முறை மும்பையில் வைத்து மொத்த போட்டிகளும் நடைபெற்றது!

இந்த நிலையில் இந்த வருடம் 16ஆவது ஐபிஎல் சீசன் மீண்டும் பழைய முறையில் சொந்த மைதானத்தில் 7 போட்டிகள் வெளியில் 7 போட்டிகள் என்று நடத்தப்படுகிறது!

- Advertisement -

இதனால் தங்களது அணியை தங்களது சொந்த மைதானத்தில் வைத்து விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் மைதானத்தில் போட்டியை பார்ப்பதற்கான டிக்கெட்டுகளும் சீக்கிரத்தில் தீர்ந்து கொண்டிருக்கிறது.

மார்ச் 31ஆம் தேதி துவங்கிய இந்த வருட ஐபிஎல் தொடர் மே 28-ம் தேதி முடிவடைய இருக்கிறது. லீக் போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நேரத்தில், தற்பொழுது பிளே ஆப்ஸ் போட்டிகளுக்கும், இறுதிப் போட்டிக்கான அட்டவணை மற்றும் மைதானங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புள்ளி பட்டியலில் இறுதி போட்டிக்கான முதல் தகுதி சுற்றுப்போட்டி மே 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கடுத்து புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கான எலிமினேட்டர் சுற்றின் முதல் போட்டி மே 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து இறுதிப் போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று போட்டி மே 26 ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. மே 28ஆம் தேதி இதே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்று ஐபிஎல் 16வது சீசன் முடிவுக்கு வருகிறது!

புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மோதிக் கொள்ளும் பிளே ஆப்ஸ் போட்டிகள் இரண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால், சிஎஸ்கே அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றால், சென்னை சேப்பாக்கத்தில் கட்டாயம் விளையாடியாக வேண்டும். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் அணி பிளே ஆப்ஸ் சுற்றில் சொந்த மைதானத்தில் விளையாடுவதை நேரடியாக பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது!