“ஐபிஎல்-லால் நீங்க கெட்டு போயிட்டிங்க.. தோனியா இருந்தாலும் இப்படித்தான் செய்யனும்” – அஷ்வின் சரமாரி விளாசல்!

0
906
Ashwin

பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த மாதம் இறுதி ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது!

ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சாகலை நீக்கியது, பேக்கப் வீரராக சஞ்சு சாம்சனை வைத்து சூரியக்குமாரை அணியில் சேர்த்தது, ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரியான ஆப் ஸ்பின்னரை எடுக்காமல், ஜடேஜா அணியில் இருக்க அவரைப்போலவே ஆன அக்சர் படேலை எடுத்தது என இதுவெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாகல் ஆகியோருக்கு உலகக் கோப்பைக்கு இன்னும் கதவுகள் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அணி வெளியிட்டின் போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ரசிகர்கள் அணியில் யாரை எடுக்க வேண்டும் என்று கூறிவரும் கருத்துகளுக்கு பதில் அளித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” இதுவரை திலக் வர்மா அயர்லாந்து தொடரில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் முதல் பந்தில் இருந்தே மிகவும் தைரியமான அணுகு முறையை வெளிப்படுத்துகிறார். மேலும் இந்த இளைஞர்கள் தெளிவான மனதுடன் பேட்டிங் செய்ய வருகிறார்கள். அவர் அணியில் புத்துணர்ச்சியை கொண்டு வருவதால் அவரை ஆதரித்து சூரிய குமாரின் இடத்துக்கு பேக்கப் வீரராக தேர்வு செய்து இருக்கிறார்கள்.

சூரியகுமார் யாதவிடம் எக்ஸ் காரணி இருக்கிறது. அதனால்தான் அவர் டி20 போல ஒருநாள் கிரிக்கெட்டிலும் வர வேண்டும் என்று அவரை ஆதரிக்கிறார்கள். நாம் எப்படி உலகக் கோப்பையை வென்றோம் என்று திரும்பிப் பார்க்க வேண்டும். தோனியாக இருந்தாலும் எந்த கேப்டனாக இருந்தாலும், அவர்கள் வீரர்கள் நன்றாக வருவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

நீங்கள் வீரரை நீக்குவது தொடர்பாகவும் சேர்ப்பது தொடர்பாகவும் விவாதம் நடத்த விரும்பினால், ஆரோக்கியமான விவாதத்தை தாராளமாக நடத்தலாம். சூரியகுமார் யாதவ் எவ்வளவு சிறந்த வீரர் என்று எல்லோரும் அறிவோம். அவர் போட்டியில் தாக்கம் தருகின்ற மேட்ச் வின்னர். மேலும் அவர் எங்கள் அணிக்கான டி20 வீரர். தற்போது நடக்கும் விவாதங்கள் எல்லாம் ஐபிஎல் தொடரால் ஏற்பட்டிருக்கும் மனநிலையால் வருவதுதான். இது ஐபிஎல் போர் மனநிலை.

நீங்கள் உலக கோப்பைக்கு வரும் பொழுது எங்கள் அனைவரையும் இந்திய அணியின் வீரர்களாகத்தான் பார்க்க வேண்டும். ஐபிஎல் முடிந்தது அதை விட்டு வெளியே வந்து விடுங்கள்.மேலும் ஒரு வீரர் இந்தியாவுக்காகநன்றாக விளையாடினால் நன்றாக விளையாடுகிறார் என்று கூறுங்கள். ஐபிஎல் முடிந்தும் ரசிகர்கள் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒரு சேசிங்கில் விராட் கோலி உடன் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் சூரியகுமார் யாதவ் விளையாடி வருகிறார் என்றால், அவரை நீங்கள் ஆதரிப்பீர்கள் இல்லையா? அவர் நம்மை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் இல்லையா? அதைத்தான் எப்பொழுதும் செய்ய வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!