ஐபிஎல் குழந்தைகள் ஐபிஎல்-ல் மட்டும்தான் விளையாடும்.. வளர்ந்த ஆண்களுக்கான கிரிக்கெட்டில் விளையாடாது – கவாஸ்கர் சரமாரி தாக்கு!

0
382
Gavaskar

இந்த வருடம் ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் மிகவும் படுதோல்வியை இந்திய அணி சந்தித்தது!

இதற்கு அடுத்து ஒருமாத காலம் ஓய்வில் இருந்த இந்திய அணி அடுத்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்தது.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றதற்கு எழுந்த விமர்சனங்களை முறியடிக்க இந்த தொடரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளும், வலிமை குறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்தாடி பல சாதனைகள் படைக்கும் என்று பேசிக்கொள்ளப்பட்டது.

ஆனால் எழுந்த பேச்சுகளுக்கு எதிர் மாறாக விஷயங்கள் நடந்து முடிய இன்னும் கடுமையான விமர்சனங்கள் இந்திய அணியின் மேல் எழ ஆரம்பித்திருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இழந்ததுதான் விமர்சனங்கள் பெரிய அளவில் உண்டாவதற்கு காரணமாக இருக்கிறது.

நடைபெற்று முடிந்த இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்தது. அதே சமயத்தில் இளம் வீரர்களான இசான் கிஷான் மற்றும் சுப்மன் கில் இருபது பேட்டிங்கும் மிக மிக சுமாராக இருந்தது. கில் நான்கு போட்டிகளில் 10 ரன்களை தாண்டவே இல்லை.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ” ஒரு வீரர் ஐபிஎல் போன்ற அணிகளுக்கு சிறப்பாக விளையாட முடியும். ஆனால் நாட்டிற்காக விளையாடும் பொழுது அப்படி முடியாது. ஏனென்றால் இது நிறைய எதிர்பார்ப்பும் அழுத்தமும் நிறைந்த வித்தியாசமான போட்டியாக மாறிவிடும். சிறந்த வீரர்களுக்கு கூட சர்வதேச போட்டிகள் மிகவும் கடினமான ஒன்றாக அமைந்து விடும். 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களால், ஆண்களுக்கான பெரிய போட்டிகளில் விளையாட முடியாமல் போவதை நிறைய முறை பார்த்திருக்கிறோம்.

ஆமாம், குழந்தைகள் குழந்தைகளுக்குஎதிராக அழகாக விளையாடுகின்றன. ஆனால் அவர்கள் ஆண்களுக்கு எதிராக வரும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் என்பது கேக் போல இருக்கிறது, அதுவே உயர் மட்ட கிரிக்கெட் என்பது சேறு போலானது. இதை அவர்கள் திடீரென்று காணும் பொழுது, மேல்மட்ட கிரிக்கெட்டில் அவர்கள் மிகவும் சிறியவர்களாக தெரிகிறார்கள்.

இந்த சிக்கல் வெறும் மனோபாவம் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. இது திறமையும் சம்பந்தப்பட்டது. தேவைப்படும் தரத்திற்கு கீழான தரத்தோடு இருக்கிறார்கள். கோடிகளில் ஐபிஎல் தொடரில் வாங்கப்படும் இந்த இளைஞர்கள் சில காலத்தில் தங்களின் சாதிக்கும் நெருப்பை இழக்கிறார்கள். பின்பு குறைந்த தொகைக்கு கூட அணியில் நீட்டிக்கப்படுகிறார்கள். அப்படியே மகிழ்ச்சியாக இருந்து விடுகிறார்கள்!” என்று மிகக் காட்டமாக குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்!