“சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நிகழ்த்தப்பட்ட ஐபிஎல் சாதனைகள்”!

0
268

ஐபிஎல் பதினாறாவது சீசனின் 24 ஆவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய சிஎஸ்கே கான்வே மற்றும் சிவம் துபேவின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களுக்கு 226 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணியின் கான்வே 45 பந்துகளில் 83 ரண்களும் சிவம் துபே 27 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்தனர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தினால் சென்னை அணி 226 ரன்கள் குவிக்க உதவியது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 227 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியினருக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் விராட் கோலி முதல் ஓவரிலேயே ஆட்டம் இழக்க லோம்ரார் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அந்த அணியின் கேப்டன் டுப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரின் சூறாவளி ஆட்டத்தால் பெங்களூர் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததால் பின் வரிசை வீரர்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை. இதன் காரணமாக பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரண்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூர்.

பெங்களூர் அணியின் கிளன் மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பௌண்டரிகளின் உதவியுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார. கேப்டன் ட்ரிபிள் எக்ஸ் 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் இதில் நான்கு சிக்ஸர்களும் ஐந்து கவுண்டர்களும் அடங்கும். மொத்தமாக 40 ஓவர்களில் 444 ரன்கள் குவிக்கப்பட்ட இந்த போட்டியில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. அவை என்னென்ன சாதனைகள் என்று பார்ப்போம்.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 226 ரன்கள் எடுத்தது இரண்டாவது ஆடிய பெங்களூர் அணி 218 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இரண்டு அணிகளும் சேர்ந்து 444 ரன்கள் சேர்த்துள்ளனர். இது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளாலும் சேர்ந்து அடிக்கப்பட்ட ஆறாவது மிகப் பெரிய ஸ்கோர் ஆகும் மேலும் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரண்டு அணிகளும் சேர்ந்து எடுத்த மிகச் சிறந்த ஐபிஎல் ஸ்கோர் இதுவாகும்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று குவித்த 226 ரன்கள் ஐபிஎல் தொடர்களில் அவர்களது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். சென்னை அணி 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல் சனிக்கிழமை குவித்த 246 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் அவர்களது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும் பஞ்சாப் அணிக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு 240 ரண்களை எடுத்தது சென்னை அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

மேலும் சென்னை அணி நேற்று எடுத்த 226 ரன்கள் பெங்களூர் அணிக்கு எதிராக அவர்கள் எடுத்த அதிகபட்ச அறன்களாகும். பெங்களூர் அணி நேற்றைய போட்டியின் போது எடுத்த 218 ரன்கள் சென்னை அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் அவர்களது அதிகபட்ச ரன்கள் ஆகும்.

நேற்றைய போட்டியின் போது 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்கல்கள் ஆகும். இதற்கு முன்பும் 2018 ஆம் ஆண்டு சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிரான போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.