ஐபிஎல் தொடரில் இருந்து 43 வயதான தோனி மட்டும் இல்லாமல் 38 வயதான ரோஹித் சர்மாவும் ஓய்வு பெற்று விடுவது நல்லது என தற்போது ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் காரணங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவில் இருக்கிறது.
தற்போது சிஎஸ்கே அணிக்கு 43 வயதில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடி வருவது சுமையாக மாறி இருக்கிறது. இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக தொடர்ந்து தடுமாறி வருவது அந்த அணியின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் ராஜாக்கள்
ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த சீரிஸ்களில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனாக ரோஹித் சர்மா இருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருக்கிறார். இவர்கள் ஐபிஎல் தொடரில் கேப்டனாக செய்திருக்கும் சாதனையை மற்றவர்கள் எட்டுவது மிகப்பெரிய கடினம்.
அதே சமயத்தில் இருவரது ஐபிஎல் செயல்பாடுகளும் மிகவும் சுமாராக மாறியிருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் அணிக்கு சுமையாக மாறி இருக்கிறார்கள். எனவே இவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றால் தங்களது அணி வெற்றி பெறுவதற்கு வசதியாக இருக்கும் என சொந்த அணி ரசிகர்களை கருத்து கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மிகப்பெரிய ஜாம்பவான்கள் தங்களது புகழை இலக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் வைக்கும் முக்கிய காரணம்
தற்போது தோனி 43 வயதிலும் சிறந்த முறையில் விக்கெட் கீப்பிங் செய்தாலும் கூட, ஒவ்வொரு அணியிலும் விக்கெட் கீப்பர்கள் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்கள். அவர்கள் மேலே வந்து தங்கள் அணிக்கு பெரிய அளவில் ரன்கள் எடுக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே தோனியின் விக்கெட் கீப்பிங் மட்டுமே வைத்துக் கொண்டு அவரை தொடர்வது பெரிய தவறு என்று சிஎஸ்கே ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் கடைசி இரண்டு ஓவர்களை தவிர எந்த ஓவரிலும் அடிக்க முயற்சி செய்யாமல் அவர் பிடிவாதமாக இருப்பதும் வெறுப்படைய வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் ரசிகர்கள் ஐபிஎல் பாக்க கூடாது.. அதுக்கு பிஎஸ்எல்-ல் இத செஞ்சி மாத்துவோம் – ஹசன் அலி பேட்டி
இதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் பவர் பிளேவை பயன்படுத்திக் கொள்ளும் அணிகள் மட்டுமே வெற்றி பெற்று வருகின்றன. இந்த நிலையில் ரோஹித் சர்மா தொடர்ந்து பவர் பிளேவில் ரன்கள் எடுக்க முடியாமலும் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள முடியாமலும் வெளியேறுகிறார். நல்ல தொடக்கம் அமையாதது மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் இதுவரையில் எந்த ஐபிஎல் சீசனிலும் அவர் 600 ரன் எடுத்தது கிடையாது. மேலும் 500 ரன் ஒரே ஒருமுறை மட்டுமே எடுத்திருக்கிறார். அத்துடன் ஐபிஎல் தொடரில் மொத்தம் 80 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியிருக்கிறார். எனவே அவர் விளையாடாமல் இருப்பதே நல்லது என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்!






