பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடர் பார்ப்பதில் இருந்து சீக்கிரத்தில் வெளியேறுவார்கள் என பரபரப்பான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் உலகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐபிஎல் தொடருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் இடையே இருக்கும் வித்தியாசம் எட்ட முடியாத அளவில் இருக்கிறது.
ஒரே நேரத்தில் வந்த அட்டவணை
பாகிஸ்தான் இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை தங்கள் நாட்டில் நடத்தியது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பாகிஸ்தான் பிரிமியர் லீக் டி20 தொடரை ஏப்ரல் மாதத்திற்கு நகர்த்த வேண்டிய கட்டாயம் உருவானது. இதனால் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடருடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நிறைய உள் பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது. மேலும் அவர்களின் கிரிக்கெட் வருமானமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிஎஸ்எல் தொடர் ஐபிஎல் தொடருடன் மோதுவதால் அதை பின் தொடரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் ரசிகர்கள் ஐபிஎல்-லை கைவிடுவார்கள்
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் வீரர் ஹசன் அலி பேசும் பொழுது “எங்கள் மக்கள் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறார்கள். எங்களுடைய ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எங்களது ஆட்டத்தால் அவர்களை எந்த அளவுக்கு மகிழ்விக்க முடியுமோ அந்த அளவுக்கு முயற்சி செய்வோம். நல்ல கிரிக்கெட் கிடைத்தால் ரசிகர்களுக்கு அது பெரிய பொழுது போக்காக அமைகிறது. நாங்கள் இங்கு சிறப்பான முறையில் விளையாடினால் எங்கள் ரசிகர்கள் ஐபிஎல் தொடர் பார்ப்பதிலிருந்து வெளியேறுவார்கள்”
இதையும் படிங்க : ரஜத் பட்டிதார் இம்ரான் கான் தோனி மாதிரி அந்த வேலையை பார்த்தார்.. பையன் அசத்திட்டார் – நவ்ஜோத் சிங் சித்து பாராட்டு
“பிஎஸ்எல் தொடரில் சிறப்பாக விளையாடுவது தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் கவனத்தை நிச்சயம் ஈர்க்கக்கூடியது. நான் தேசிய டி20 தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடியிருக்கிறேன். மேலும் கராச்சி கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பான முறையில் விளையாடுவதற்கு நான் முயற்சி செய்வேன். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பவதுதான் என்னுடைய குறிக்கோள்” என்று தெரிவித்திருக்கிறார்.






