ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மூலம் 100 கோடிக்கு மேல் இதுவரை சம்பாதித்துள்ள 5 கிரிக்கெட் வீரர்கள்

0
141
Kohli,Dhoni and ABD

ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகிறது. அதனுடைய வளர்ச்சியை சர்வதேச அளவில் விண்ணை முட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு சௌரவ் கங்குலி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த முடியாமல் போனால் சுமார் 2500 கோடி ரூபாய் பிசிசிஐ’க்கு நஷ்டம் என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்காண்டு வருவாய் உயர்ந்து கொண்டே போகும். அவர்களது விளையாட்டை கருத்தில் கொண்டு அவர்களுக்கான வருவாயை அண்ணன்தான் அணி நிர்வாகம் உயர்த்திக் கொண்டே போகும் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். அதன்படி இதுவரை நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் தொடர்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ள வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

5. ஏபி டிவில்லியர்ஸ் – ₹ 102,51,65,000

2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை டெல்லி அணியில் விளையாடி விட்டு அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். பெங்களூர் அணியின் சூப்பர் மேன் என்று தான் இவரை அனைவரும் அழைக்கிறார்கள்.

மைதானத்தில் நின்று எந்த திசையிலும் பந்தை சாமர்த்தியமாக அடிக்கும் திறமை கொண்ட இவர் இதுவரை நிறைய போட்டிகளில் ஒற்றை ஆளாக நின்று பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். அதன் காரணமாகவே நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் தொடர்களில் இவர் சம்பாதித்த மொத்த வருமானம் 102 கோடியே 51 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஆகும்.

4. சுரேஷ் ரெய்னா – ₹ 110,74,00,000

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிக அதிக ரன் குவித்த வீரர் சுரேஷ் ரெய்னா. தொடர்ச்சியாக எல்லா ஐபிஎல் தொடரிலும் மிக சிறப்பாக இவர் பங்களிப்பால் அதன் காரணமாகவே அனைவரும் இவரை மிஸ்டர் ஐபிஎல் என்று அழைப்பார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அனைத்து வருடமும் சிறப்பாக பங்களிக்க கூடிய இவரின் மொத்த ஐபிஎல் தொடருக்கான வருமானம் இந்திய மதிப்பில் சுமார் 110 கோடியே 74 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விராட் கோலி – ₹ 143,20,00,000

2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பெங்களூரு அணியில் விளையாடி வரும் விராட் கோலி அனைத்து வருடமும் பெங்களூர் அணிக்காக மிக சிறப்பாக பங்களிக்க கூடிய ஒரு வீரர். ஒரு வீரராக பெங்களூர் அணியில் விளையாட தொடங்கி தற்போது பெங்களூர் அணியை தலைமை தாங்கி வருகிறார்.

- Advertisement -

மூன்று முறை பெங்களூர் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி மூன்று முறையும் தோல்வி பெற்றது வருத்தத்திற்குரிய விஷயமாகும். ஐபிஎல் தொடரில் 6 ஆயிரம் ரன்களை கடந்த கடந்த இவரின் மொத்த ஐபிஎல் தொடருக்கான வருமானம் இந்திய மதிப்பில் சுமார் 143 கோடியே 20 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

2. ரோகித் சர்மா – ₹ 146,60,00,000

2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடினார். 2009ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்றது, அந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை இவர் வென்றார்.

அதன் பின்னர் 2011ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட தொடங்கினார். 2013-ம் ஆண்டு இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் எட்டு வருடங்களில் ஐந்து முறை ஐபிஎல் தொடரை இவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது.

மேலும் 6 முறை ஐபிஎல் தொடரை வென்ற வீரராக இவர் மாபெரும் சாதனையை தன் பெயருக்குப் பின்னால் வைத்திருக்கிறார். மிகப்பெரிய சாதனைகளைப் படைத்த இவரது மக்கா ஐபிஎல் வருமானம் இந்திய மதிப்பில் சுமார் 146 கோடியே 60 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

1. மகேந்திர சிங் தோனி – ₹ 152,84,00,000

2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை அணியின் ஒரே கேப்டனாக பதவி வகிக்கிறார். இவரது தலைமையில் சென்னை அணி இதுவரை மொத்தம் மூன்று முறை ஐபிஎல் தொடரை கைப்பற்றி இருக்கிறது. மேலும் ஐந்து முறை இவரது தலைமையில் சென்னை அணி ரன்னர் அப் அணியாகவும் சாதனை படைத்திருக்கிறது.

ஒரு வீரராகவும் இவர் நிறைய போட்டிகளில் சென்னை அணிக்காக இறுதி கட்டத்தில் களமிறங்கி சென்னை அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஒரு மிகச்சிறந்த பினிஷர் வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 13 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவரது மொத்த ஐபிஎல் வருமானம் நம் இந்திய மதிப்பில் 152 கோடியே 84 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.