ஐபிஎல் கிரிக்கெட் வரலாறு.. ஒருமுறை கூட சிஎஸ்கே ஜெயிக்காத 3 விருதுகள்.. அரிய நிகழ்வு

0
882

மார்ச் மாத இறுதியில் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியிருக்கிறது.

ஐபிஎல்லில் முன்னணி அணிகள் என்றால் அதில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை சிஎஸ்கே ஐந்து முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது. சிஎஸ்கேவில் பல பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை பலமுறை வென்றுள்ளனர்.

- Advertisement -

அதேபோல அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான ஊதா நிற தொப்பியை மோகித் சர்மா, பிராவோ போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் பெற்றிருக்கிறார்கள். அதேபோல போட்டிகளில் நன்னடத்தைக்கு கொடுக்கப்படும் பேர் பிளே அவார்டையும், வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருது மற்றும் சிறந்த கேட்ச் பிடித்ததற்கான விருது என பல விருதுகளை சிஎஸ்கே வென்றுள்ளது.

இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே இந்த மூன்று விருதுகளையும் ஒரு முறை கூட வென்றதில்லை என்ற ஆச்சரியமும், சோகமும் நீடிக்கிறது. எனவே இனிவரும் தொடர்களிலாவது சிஎஸ்கே அந்த மூன்று விருதுகளையும் வெல்லும் என்று எதிர்பார்ப்போம்.

1.மதிப்புமிக்க வீரர்: மதிப்புமிக்க வீரர் (எம்பிபி) என்பது ஒரு சீசனில் பேட்டிங், மற்றும் பந்துவீச்சின் மூலம் அதிக புள்ளிகளை பெறும் வீரர் இந்த விருதினை பெறுகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரேன் மட்டும் மூன்று முறை இந்த விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சென்னை அணியில் இருந்து ஒருவர் கூட இன்னும் இந்த விருதை வாங்கவில்லை.

- Advertisement -

2.அதிக சிக்ஸர்கள் விருது: ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்ததற்காக கொடுக்கப்படும் இந்த விருதையும் சென்னை அணி ஒரு முறை கூட வாங்கவில்லை. சென்னை அணியில் பெரும்பாலும் டைமிங்கில் விளையாடக்கூடிய வீரர்களே அதிகம் இருப்பதால் சிஎஸ்கேவிற்கு இந்த விருது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஆனால் சென்னை அணியின் தொடக்கத்தில் ரெய்னா, மேத்யூ ஹைடன், அல்பி மோர்கல், தோனி போன்ற சிறந்த பவர் ஹிட்டர்கள் இருந்தபோதிலும் இந்த விருதை வெல்ல முடியவில்லை.

இதையும் படிங்க:கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா?.. அவரே சூசகமாக உண்மையை உடைத்தார்.. ரசிகர்கள் ஆச்சரியம்

3.அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் விருது: குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்ததற்காக வழங்கப்படும் இந்த ஸ்ட்ரைக் ரேட் விருதையும் இன்னும் ஒரு முறை கூட வாங்கவில்லை. மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற பவர் ஹிட்டர்கள் சென்னை அணியில் இருந்தாலும், நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளையாடவில்லை என்பது மற்றும் ஒரு சோகம். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு ஸ்மித் மற்றும் மெக்கல்லம் என்ற இரு அதிரடி ஆட்டக்காரர்கள் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினர். ஆனால் அவர்களாலும் அந்த விருதை பெற முடியவில்லை என்பது மற்றுமொறு சோகம். இனிவரும் காலத்திலாவது இந்த விருதுகளை சிஎஸ்கே அணி வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.