கம்பீர் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா?.. அவரே சூசகமாக உண்மையை உடைத்தார்.. ரசிகர்கள் ஆச்சரியம்

0
118
Gambhir

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சரியான நபரை இந்திய கிரிக்கெட் வாரியம் வலை வீசி தேடி வருகிறது. இதில் பலரது பெயர்கள் பேசப்படுகின்றன. இதில் முக்கியமானவராக ஐபிஎல் கொல்கத்தா அணியின் மென்டர் கம்பீர் இருக்கிறார். தற்பொழுது அவர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வருவாரா? என்பது குறித்து சூசகமாக கூறியிருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட கம்பீர், 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் மென்டர் பொறுப்புக்கு வந்தார். இரண்டு ஆண்டுகள் லக்னோ அணியில் அந்த பொறுப்பில் தொடர்ந்த அவர் அங்கிருந்து விலகி கொல்கத்தா அணியின் மென்டராக இந்த ஆண்டு இணைந்தார்.

- Advertisement -

அவர் கொல்கத்தா அணிக்குள் வந்ததும் அணி புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் பெற்றது. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஏற்படுத்திய இரண்டு மாற்றங்கள் அந்த அணியை அசுர பலம் மிக்க அணியாக மாற்றியது. லீக் சுற்று நெருங்க நெருங்க கொல்கத்தா கோப்பையை வெல்லும் முக்கிய அணியாக மாறியது. எதிர்பார்த்தது போலவே கோப்பையை வென்றும் அசத்தியது. இந்த நிலையில் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஆகிறார் என்ற செய்திகளும் உலாவுகிறது.

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “அடுத்து நான் என்ன செய்வேன் என்றால் என் மகள் மற்றும் மனைவி உடன் வெக்கேஷன் செல்வேன். ஏனென்றால் கிரிக்கெட் பற்றி சிந்திக்காமல் இருப்பதற்கு இதுதான் மிகவும் சரியான வழி. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மட்டும்தான் இந்த விஷயங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்கும்.

- Advertisement -

கொல்கத்தா அணி மிக வெற்றிகரமான அணியாக இருந்து இன்னும் மூன்று கோப்பைகளை வெல்ல வேண்டும். அதற்கான பயணமே இப்பொழுதுதான் தொடங்கி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் சூசகமாக ஒரு விஷயத்திற்கான விடையை கூறியிருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படிங்க : கவலைப்படாத உன் ஆப்ரேஷன் நடக்கும் – மைதானத்தில் ரசிகருக்கு தல தோனி தந்த வாக்குறுதி

அதாவது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் கொல்கத்தா அணியின் மென்டர் பதவியில் தொடரப் போவதைதான் இப்படி கூறியிருக்கிறார் என்று கருதுகிறார்கள். ஏனென்றால் இந்திய பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வேறு எந்த அணிகளுக்கும் பயிற்சி அளிக்க முடியாது. எனவே கொல்கத்தா அணிக்கு கோப்பைகளை வெல்ல நினைப்பதாக கூறும் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு வர மாட்டார் என்று ரசிகர்கள் நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -