ஏலம் விடுபவர் திடீரென மயங்கி விழுந்ததால் மெகா ஏலம் தள்ளிவைப்பு – ‍அவரின் உடல்நிலை மற்றும் மீண்டும் ஏலம் தொடங்கும் நேரத்தை அறிவித்துள்ள பிசிசிஐ

0
546
IPL Auctioner Collapsed

பிசிசிஐ தலைமையிலான மெகா ஏலம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் சுற்று வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 2-வது சுற்று நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏலதாரர் ஹூக் எட்மேடஸ் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழுந்ததை நேரடியாக கண்ட ஒவ்வொரு அணி நிர்வாக உறுப்பினர்களும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏலதாரர் ஹூக் எட்மேடஸ்

2018 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ இவரை ஐபிஎல் தொடர் ஏலதாரராக நியமித்தது. பிரிட்டனை சேர்ந்த இவர் இந்த துறையில் 36 வருட காலம் அனுபவம் உள்ளவர். உலகிலுள்ள 30க்கும் மேல் உள்ள நகரங்களில் இவர் ஏலதாரராக தனது பணியை செய்து இருக்கிறார்.

- Advertisement -

இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த மெகா ஏலத்தில் முதல் சுற்று முடிந்த இரண்டாம் சுற்று நடந்து கொண்டிருந்தது. இலங்கையைச் சேர்ந்த வணிந்து ஹசரங்காவை அணிகள் ஏலம் கேட்டு கொண்டிருந்த பொழுது, திடீரென மேடையிலிருந்து நிலை தடுமாறி ஹூக் எட்மேடஸ் மயங்கி விழுந்தார்.

அவருடைய உடல்நலம் சரியாக வேண்டும் என அனைத்து இந்தியர்களும் பிரார்த்தனை செய்து கொண்டனர். பிரார்த்தனையின் பலனாக அவர் தற்போது நன்றாக இருக்கிறார் என்ற செய்தி தெரிய வந்துள்ளது. மேலும் மீண்டும் மெகா ஏலம் இந்திய நேரப்படி மூன்று முப்பது மணிக்கு தொடங்கும் என்ற கூடுதல் தகவலும் கிடைத்துள்ளது.

மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த இடத்தில் தற்போது வரை அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 12 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா அணி மூலமாக கைப்பற்றப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹர்ஷால் பட்டேல் 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மூலமாக கைப்பற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -