“மே 21ஆம் தேதி ஐபிஎல் 6 டீம் வெளிய போயிடும்!” – ரோஹித் சர்மா புதிய திட்டம் பற்றி பேச்சு!

0
2177
Rohitsharma

இந்திய அணி ஆஸ்திரேலிய அணி உடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றி உள்ளது. இதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி நடக்க இருக்கிறது!

தற்பொழுது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்தியா அணி கைப்பற்றி உள்ள நிலையில். இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி உடன் மோத இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 17ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது. தனிப்பட்ட காரணத்தால் இந்த முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை!

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்குப் பிறகு மார்ச் 31ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு உடனடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து பயணப்பட வேண்டி உள்ளது.

நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு பிறகு பேசி உள்ள இந்திய கேப்டன் ரோஹித் சர்மா “இது ஒரு அற்புதமான தொடர். இந்த வார்த்தையிலிருந்து இந்த தொடர் எப்படி இருந்தது என்று புரிந்து கொள்ளலாம். பலவீரர்கள் இந்த தொடரில் முதல் முறையாக விளையாடினார்கள். இந்தத் தொடரின் முக்கியத்துவத்தையும் எதிர்பார்ப்பையும் நாங்கள் புரிந்து கொண்டிருந்தோம். இந்தத் தொடருக்காக நிறைய கடின உழைப்பு நடந்துள்ளது. வெவ்வேறு நிலைகளில் நாங்கள் தேவைப்பட்ட பதில்களை இந்த தொடருக்குள் கொண்டு வந்தோம். தொடரை முதலில் சிறப்பாக தொடங்குவது எவ்வளவு முக்கியம் என்று நாங்கள் அறிவோம்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா ” தொடரில் இரண்டாவது டெல்லி டெஸ்ட் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அந்த ஆட்டத்தில் நாங்கள் பின்தங்கி இருந்தோம். இந்தூரில் நாங்கள் முடிந்த அளவு அழுத்தம் கொடுத்து தோற்றோம். எங்கள் அணியில் வெவ்வேறு வீரர்கள் முக்கியமான கட்டத்தில் கைகளை உயர்த்தினார்கள். நிறைய தோழர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு கடினமான நேரத்தில் எங்களை பிணையில் எடுத்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்பது எளிதானது அல்ல அது மிகவும் கடினமானது!” என்று கூறினார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“நான் மிகவும் திருப்தியாக இருக்கிறேன். நான் என்ன மாதிரியான அளவுகோலை நிர்ணயித்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் தனிப்பட்ட மைல்கற்களை ஒதுக்கி வைத்திருக்கிறேன். தொடரில் நாங்கள் விரும்பிய பலனை பெற்று இருக்கிறோம் மேலும் விரும்பிய முடிவையும் பெற்றிருக்கிறோம். மே 21ஆம் தேதி ஆறு ஐபிஎல் அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிடும். அந்த அணிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்து அனுப்பி வைக்கும் திட்டம் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!