2026 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு போகக்கூடிய டாப்-5 வெளிநாட்டு வீரர்கள் யார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். பல பெரிய பெயர்கள் ரிலீஸ் ஆகி, சிலர் ஓய்வு பெற்ற நிலையில், வெளிநாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய தேவை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “தற்போது தென்னாப்பிரிக்க தொடர் நடந்து கொண்டிருப்பதால் அது ஏலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நோர்ட்ஜேவும் மில்லரும் இந்தியாவுக்கு எதிராக நன்றாக ஆடினால் ரொம்ப பெரிய தொகை கிடைக்கும். மதீஷ பதிரனாவையும் இதே லிஸ்ட்டில் வைத்திருக்கொள்கிறேன்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
“பதிரனா CSK-யால் ரிலீஸ் செய்யப்பட்டார். மில்லர் LSG-யில் சொதப்பியதால் திரும்ப ஏலத்திற்கு வந்துவிட்டார். நோர்ட்ஜே காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கிறார். 4வது இடத்தில் நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் மீது அணிகளுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. CSK-வுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை.
“லிவிங்ஸ்டன் பஞ்சாப், RCB என எங்கு சென்றாலும் அண்டர் பெர்ஃபாம் செய்திருக்கிறார். ஆனால் இப்போது சப்ளை-டிமாண்ட் தான் முக்கியம். அதிரடி மிடில் ஆர்டர் வீரர்களே இல்லை, மேக்ஸ்வெல்லும் இல்லை. அதனால் இவரும் பெரிய தொகை பெறுவார். பெயார்ஸ்டோவை No.2-ல் வைத்திருக்கிறேன். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் சில மேட்ச் ஆடினார்.”
” KKR-வுக்கு கீப்பர்-பேட்ஸ்மேன் வேண்டும், டெல்லிக்கு டாப் ஆர்டரில் அதிரடி வீரர் வேண்டும். அதனால் இவருக்கு நிறைய போட்டி இருக்கும்” என்றார். தற்போது இருவரும் ILT20-ல் ஆடி வருகின்றனர். குறிப்பாக லிவிங்ஸ்டன் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக 3 இன்னிங்ஸில் 102 ரன் சராசரி 51, ஸ்ட்ரைக் ரேட் 172.88 என்ற அளவில் அடித்து அசத்தி வருகிறார்.
இதையும் படிங்க: லாரா அபிஷேக் ஷர்மா கிட்ட மணிக்கணக்கா பேசி.. இத செய்ய சொல்லிக்கிட்டே இருக்காரு – தந்தை பேட்டி
“கேமரூன் கிரீன் தான் No.1. யாரும் இவரை நெருங்க முடியாது. அதிகபட்சம் 18 கோடி வரை தான் கொடுக்க முடியும். ஆனால் உண்மையான போட்டி நடந்தால் 25 முதல் 28 கோடி வரை போகலாம். KKR, CSK நிச்சயம் வரும், வேறு ஒரு டீமும் குதிக்கலாம்” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். 2026 ஐபிஎல் ஏலம் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடக்கவுள்ளது. மூன்று முறை சாம்பியனான KKR அதிகபட்சமான ₹64.30 கோடி பர்ஸுடன் ஏலத்துக்கு வருகிறது.