கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் பிரைன் லாரா அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து மணிக்கணத்தில் பேசி ஒரு முக்கியமான விஷயத்தை வலியுறுத்தி வருகிறார் என அவரது தந்தை ராஜ்குமார் சர்மா தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா இருந்து வருகிறார். மேலும் இந்த வடிவத்தில் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார். 15 முதல் 20 பந்துகளை சந்தித்தாலே இந்திய அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்து விடக் கூடியவராக இருக்கிறார்.
கிடைக்காத வாய்ப்பு
அபிஷேக் சர்மா தொடக்க வீரராக மட்டுமே விளையாடக்கூடிய ஒரு சிறப்பு வீரராக இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இன்னும் வாய்ப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து அவர் ஒரு டி20 வீரராகவே இருந்து வருகிறார். தற்போது துவக்க இடத்திற்கு ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் என இரண்டு சிறந்த வீரர்கள் வெளியில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு என்பது யோசித்துப் பார்க்க முடியாத தூரத்தில் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை போல, அபிஷேக் சர்மா வாழும் விளையாட முடியும் என பிரையன் லாரா நம்புவதாக அவரது தந்தை தெரிவித்திருக்கிறார்.
மணிக்கணக்கில் பேசுகிறார்
இதுகுறித்து அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா பிரையன் லாரா என்ன மாதிரியான அறிவுரை தந்து கொண்டிருக்கிறார் என்று கூறும் பொழுது “அபிஷேக் சர்மாவுக்கு முதல் வெற்றி சிவப்பு பந்து கிரிக்கெட்டில் இருந்துதான் வந்தது. அதுதான் அவருக்கு வெள்ளைபந்து கிரிக்கெட்டில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. லாரா அபிஷேக் சர்மாவை அனைத்து வடிவ வீரராக பார்க்கிறார்”
இதையும் படிங்க: கம்பீர் ODI சீரிஸ்ல விராட் ரோகித்துக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்கல.. அத பாக்கவே விசித்திரமா இருந்துச்சு-ராபின் உத்தப்பா பேச்சு
” லாரா என் மகனுடன் மணி கணக்கில் அலைபேசியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்படிப் பேசும் அவர் தற்போது அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடும் முறையில், அதே ஆதிக்கத்தில் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுமாறு அறிவுறுத்தி வருகிறார்” என்று கூறியிருக்கிறார்.






