ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி யாரை தக்க வைக்க வேண்டும், யாரை விடுவிக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். அணி விடுவிக்கக்கூடிய இரு வீரர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டார்.
உடைந்திராத ஒன்றை சரிசெய்ய தேவையில்லை என்று கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, அணி அதிக மாற்றங்களை செய்ய வேண்டாம் என்றும், முடிந்தவரை அதிக வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். “லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ரசிக் சலாம் தார். இவர்கள் இருவரையும் விடுவிக்கலாம். அதைத் தவிர, வேறு யாரையும் விடுவிக்கக்கூடாது.”
” உடைந்திராத ஒன்றை ஏன் சரிசெய்ய வேண்டும்? உடைந்திருந்தாலும், அவர்கள் சாதனைகளை உடைத்து வருகின்றனர். எனவே லிவிங்ஸ்டனையும், ரசிக்கையும் விடுவிக்கலாம். அதிக மாற்றங்கள் செய்யாமல், மற்ற அனைவரையும் தக்கவைத்து, அவர்களை போகவிடாதீர்கள்” என்று அவர் தனது யூடியூப் சேனலில் கூறினார்.
தக்கவைத்து கொள்ளுங்கள்:
ஆர்சிபி முன்பு 2009, 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் மூன்று இறுதிப் போட்டிகளில் விளையாடியது. ஆனால், ஒவ்வொரு முறையும் இறுதி கோட்டை தாண்ட முடியவில்லை. 2025 சீசனில், பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றனர். லிவிங்ஸ்டன் ₹8.75 கோடிக்கும், ரசிக் ₹6 கோடிக்கும் வாங்கப்பட்டனர். விராட் கோலி, கேப்டன் ரஜத் பட்டிதார், ஜிதேஷ் ஷர்மா போன்றோருடன் மிடில் ஆர்டரில் சிறந்த ஆப்சன்களை தேட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “லியாம் லிவிங்ஸ்டன் விலை உயர்ந்தவர். ஆனால் அவர் நன்றாக செயல்படவில்லை. மிடில் ஆர்டரில், ரஜத் பட்டிதார், விராட் கோலி மற்றும் ஜிதேஷ் ஷர்மாவுடன் ஒரு உறுதியான பேட்ஸ்மேனை கண்டறிய முடிந்தால், டிம் டேவிட் பின்னர் வருவதால், லிவிங்ஸ்டனை விடுவித்து சிறந்த பேட்ஸ்மேனை வாங்கலாம்” என்றார்.
2 பேரை மாற்றனும்:
லிவிங்ஸ்டன் 8 போட்டிகளில் விளையாடி 112 ரன்கள் மட்டுமே எடுத்தார், சராசரி 16, ஸ்ட்ரைக் ரேட் 133.33 உடன் ஒரு அரைசதம் அடங்கும். அணியில் இந்திய பேக்அப் பேஸர் மற்றும் ஸ்பின்னருக்கான தேவையையும் ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார். “யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசல்வுட், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் நுவான் துஷாரா இருக்கின்றனர். எனவே ஒரு இந்திய பேக்அப் பேஸ்ட் போலரை பெறுவது நல்லது.”
இதையும் படிங்க:
“அதற்காக ரசிக்கை விடுவிப்பதா? அவர் நன்றாக இருந்தார். சந்தேகமில்லை, ஆனால் அவர் 6 கோடிக்கு சென்றார். எனவே அவரை விடலாம். க்ருனல் மற்றும் சுயாஷுடன் ஒரு இந்திய ஸ்பின் பவுலரை பெறுவதும் நல்லது.” என்று அவர் கூறினார். ரசிக் சலாம் தார் கடந்த சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 1 விக்கெட் எடுத்தார். சராசரி 70, எகானமி 11.66 ஆகும்.