ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் பெரும்பான்மையான அணிகள் ஏழு போட்டிகளில் விளையாடிவிட்டது. இதன் மூலம் முதல் பகுதி நிறைவுக்கு வருகிறது. இந்த சூழலில் இன்னும் ஏழு லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெறும், எந்த அணி தோல்வியை தழுவும் என்பதை பொறுத்து தான் பிளே ஆப் சுற்றுக்கு யார் தகுதி பெறுகிறார்கள் என்பதை தீர்மானிக்க முடியும்.
தற்போது அடி பாதாளத்தில் உள்ள சிஎஸ்கே அணி அடுத்த 7 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடுவார்கள். இதனால் ஐபிஎல் தொடரில் என்ன எப்படி நடக்கும் என்பதை கணிக்கவே முடியாது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் பகுதியின் முடிவில் எந்த வீரர் ஆரஞ்சு மற்றும் பர்பிள் தொப்பியை வென்று இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
ஆரஞ்ச் தொப்பிக்கான பட்டியல்:
ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியில் முதலிடத்தில் நிக்கோலஸ் பூரான் இருக்கின்றார். 7 போட்டிகளில் விளையாடி 357 ரன்கள் அடித்து அவர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றார். இரண்டாம் இடத்தில் குஜராத் வீரர் சாய் சுதர்சன் 329 ரன்கள் உடன் இருக்கின்றார். மூன்றாவது இடத்தில் மிட்செல் மார்ஸ் 295 ரன்கள் உடன் உள்ளார்.
நான்காவது இடத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 250 ரன்கள் உடன் உள்ளார். ஐந்தாவது இடத்தில் விராட் கோலி 248 ரன்கள் உடன் உள்ளார். ஆறாம் இடத்தில் சூரியகுமார் 239 ரன்கள் உடன் உள்ளார். ஏழாம் இடத்தில் கே.எல் ராகுல் 238 ரன்களுடனும், எட்டாவது இடத்தில் ஜெய்ஸ்வால் 233 ரன்களுடனும், ஒன்பதாவது இடத்தில் சஞ்சு சாம்சன் 224 ரன்கள் உடன் உள்ளார்.
பர்பிள் தொப்பி பட்டியல்:
பத்தாவது இடத்தில் ரஹானே 221 ரன்களுடன் இருக்கின்றார். இந்த நிலையில் பர்பிள் நிறத் தொப்பியை யார் வென்று இருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே வீரர் நூர் அஹமத் 7 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட் உடன் முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ்11 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டில் இப்படி கூட ஒரு நோ-பால் இருக்கிறதா?.. திடீரென ஆச்சரியமடைந்த ரசிகர்கள்.. முழு விளக்கம்
மூன்றாவது இடத்தில் கலீல் அகமத் 11 விக்கெட்களுடன் உள்ளார். நான்காம் இடத்தில் லக்னோ அணியின் சர்துல் தாக்கூர் 11 விக்கெட் உடன் உள்ளார். ஐந்தாவது இடத்தில் வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட் உடன் உள்ளார். ஆறாவது இடத்தில் குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா 10 விக்கெட் உடன் உள்ளார். 7,8, 9 , 10 ஆகிய இடங்களில் தலா 10 விக்கெட்டுகளுடன் சாய் கிஷோர்,சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் உள்ளனர்.






