ஐபிஎல் 2025.. நாங்கள் வாங்கியதிலே சிறந்த ஆர்சிபி வீரர் இவர் தான்.. ஆண்டி பிளவர் கருத்து

0
7

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி தற்போது புள்ளி பட்டியலில் 6 வெற்றி, மூன்று தோல்வி என 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் ஆர் சி பி அணி இன்னும் இரண்டு போட்டிகளை வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

இந்த தருணத்தில் ஆர் சி பி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் இந்த ஒரு வீரரை ஏலத்தில் வாங்கியதன் மூலம் ஆர் சி பி அணியின் பலம் அதிகரித்து விட்டதாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் ஏலத்தில் தேர்வு செய்த மிகவும் முக்கியமான வீரர் என்றால் அது குர்னல் பாண்டியா தான்.”

- Advertisement -

குர்னல் பாண்டியாவுக்கு பாராட்டு:

“அவருடைய ஆல்ரவுண்டர் திறமை மற்றும் அனுபவம் எங்கள் அணிக்கு மிக உதவிகரமாக அமைந்திருக்கிறது. ஐபிஎல் தொடரை எப்படி வெல்ல வேண்டும் என்ற அனுபவம் அவரிடம் இருக்கின்றது. ipl தொடரில் ஒரு அணியை வழிநடத்தியும் இருக்கின்றார்.”

“சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறார். அவருக்கு இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கின்றது. அது எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இரண்டு சகோதரர்களுக்கும் அந்த திறமை இருக்கின்றது. எனவே அவரை நாங்கள் ஏலத்தை எடுத்தது மிகவும் முக்கியமான விஷயம் என்று நான் கருதுகின்றேன்.”

- Advertisement -

“இதைப் போன்று எங்கள் அணியின் சுழற் பந்துவீச்சு பயிற்சியாளர் உடன் இணைந்து குர்னல் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் மற்ற வீரர்களுடன் தன்னுடைய இடத்தை குறித்து பேசி வருகின்றார். மேலும் அணியில் உள்ள வீரர்களை ஒருங்கிணைந்து செயல்பட குர்ணல்பாண்டியா நடவடிக்கை எடுக்கிறார்.”

குர்னல் பாண்டியா செயல்பாடு:

“அவர் இவ்வாறு செயல்பட பார்க்கும்போது நன்றாக இருக்கின்றது என்று ஆண்டி பிளவர் பாராட்டியுள்ளார்.நேற்றைய ஆட்டத்தில் கூட ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 40 பந்துகளில் 72 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது  நிதிஷ் ரானாவின் விக்கெட்டை குர்னல் பாண்டியா வீழ்த்தி இருக்கின்றார்.”

இதையும் படிங்க: இப்ப ஆர்சிபிக்கு பெரிய சவாலே வேற.. நாங்க ஜெயிக்கிறதுக்கு இந்த பிளானுக்கு வந்துட்டோம் – விராட் கோலி பேச்சு

“34 வயதான குர்னல் பாண்டியா நடப்பு சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 24 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 18 ரன்கள் தான் சேர்த்திருக்கிறார். ஆனால் பந்துவீச்சில் குர்னல் பாண்டியா நடப்பு சீசனின் அபாரமாக செயல்பட்டு 12 விக்கெட் வீழ்த்தி ஆர் சி பி அணியின் வெற்றிக்கு வித்திட்டு இருக்கிறார்.”

- Advertisement -