நேற்று ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானத்தில் பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து விராட் கோலி சில சுவாரசியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானத்தில் தொடர்ந்து மூன்று போட்டிகளை தோற்று இருந்தது. ஒரு வெற்றியும் பெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நேற்று மீண்டும் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்தது.
திட்டங்களை மாற்றிய ஆர்சிபி அணி
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆர் சி பி அணிக்கு படிக்கல் மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமாக அரைசதம் அடித்தார்கள். இதன் காரணமாக 20 ஓவர்களில் ஆர்சிபி அணி 205 ரன்கள் குவித்தது. முதல்முறையாக சொந்த மைதானத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சிறந்த முறையில் பேட்டிங் செய்திருந்தது.
இதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 195 ரன் எடுக்க முடிந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் ராஜஸ்தான் பேட்டிங் செய்யும்பொழுது வெற்றி வாய்ப்பு அதிகபட்சமாக அவர்களுக்கே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதான் சவாலாக இருக்கிறது
இதுகுறித்து விராட் கோலி பேசும் பொழுது “எங்களுக்கு டாஸ் வெல்வதுதான் மிகவும் சவாலான காரியமாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து மூன்று ஆட்டங்கள் எங்கள் சொந்த மைதானத்தில் தோற்று விட்டோம். எனது பேட்டிங் செய்வதில் நாங்கள் சிறப்பாக என்ன செய்யலாம் என்று விவாதித்தோம். நாங்கள் ஸ்கோர் எடுத்த அளவிற்கு ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பாக இல்லை. ராஜஸ்தான் பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு வந்து சிறப்பாக மாறியது”
இதையும் படிங்க : 14 வயசு சூரியவன்சி அடுத்த வருஷம் ஐபிஎல்ல இருக்க மாட்டார்.. கோலிய பார்த்து தப்பிக்கணும் – சேவாக் விமர்சனம்
“இப்போது எங்களுடைய திட்டம் எளிமையாக மாறிவிட்டது. எங்களுடைய ஒரு வீரர் தொடர்ந்து விளையாடுவார். மீதமுள்ளவர்கள் அவரைச் சுற்றி அதிரடியாக விளையாட வேண்டும் அவ்வளவுதான். சால்ட் அவருடைய பாணியில் விளையாடினார். எனக்கும் படிக்கலுக்கும் இந்த மைதானம் நல்ல முறையில் தெரியும். எனவே நாங்கள் பந்தை டைமிங் செய்ய முடிவு செய்தோம். மேலும் பவுண்டரிகள் அடித்து எதிரணி மீது அழுத்தத்தை வைத்திருந்தோம்” என்று கூறி இருக்கிறார்.






