பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 2025 ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோதவுள்ளன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்தப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி, எலிமினேட்டர் போட்டியின் வெற்றியாளருடன் இரண்டாவது குவாலிஃபையரில் விளையாடும்.
அதேவேளை வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.இரு அணிகளும் இந்த சீசனில் 14 போட்டிகளில் 9 வெற்றிகளைப் பெற்று சிறப்பாக விளையாடியுள்ளன. குறிப்பாக, ஆர்சிபி அனைத்து வெளியூர் போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. அவர்கள் ஒருங்கிணைந்து ஒரே அணியாக செயல்பட்டு, தங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
நேரம், எந்த சேனல், பிட்ச் ரிப்போர்ட்:
இரு அணிகளின் தற்போதைய ஃபார்மை கருத்தில் கொண்டு, இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். மேலும், இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பதால், இந்தப் போட்டி வரலாற்று சாதனை படைப்பதற்கு முக்கியமானதாக அமையும்.
போட்டி விவரங்கள்:
போட்டி: பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குவாலிஃபையர் 1, ஐபிஎல் 2025
இடம்: மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், முல்லன்பூர், சண்டிகர், தேதி & நேரம்: மே 29, 2025, வியாழன், இரவு 7:30 மணி
நேரடி ஒளிபரப்பு மற்றும் ஸ்ட்ரீமிங்: ஜியோஸ்டார் நெட்வொர்க் சேனல்கள், ஜியோஹாட்ஸ்டார்
பிட்ச் அறிக்கை:
சண்டிகரின் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பல ஐபிஎல் போட்டிகளை நடத்தியுள்ளது. இந்த பிட்ச் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடித்து பாதுகாக்க முயல்வார். மழைக்கான வாய்ப்பு இல்லாததால், போட்டி எவ்வித இடையூறுமின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிளேயிங் XI, நேருக்கு நேர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இதுவரை 34 போட்டிகளில் மோதியுள்ளன, இரு அணிகளும் தலா 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் :
பிரப்ஸிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஒமர்ஸை, ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங்.
இம்பாக்ட் பிளேயர்: பிரவீன் துபே.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025..பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி செயல்பாடு எப்படி? கை நழுவி போன வாய்ப்புகள்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :
பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், நுவான் துஷாரா, சுயாஷ் ஷர்மா.
இம்பாக்ட் பிளேயர்: ரஜத் பட்டிதார்.






