ஐபிஎல் 2025.. தொடர்ந்து தடுமாறும் ரிஷப் பண்ட்.. நிக்கோலஸ் பூரானிடம் பொறுப்பை கொடுங்க.. ஆஸி. வீரர் கருத்து

0
24

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லக்னோ அணி 11 போட்டிகளில் ஐந்து வெற்றி ஆறு தோல்விகளைத் தழுவி 10 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெயரை பெற்றுள்ள ரிஷப் பண்ட், பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் கூட ரிஷப் பண்ட் 17 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டுமே அடித்தார். பண்ட் மட்டும் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் அடித்திருந்தால் ஒருவேளை பஞ்சாப் அணியை வீழ்த்தி இருக்கக்கூடிய முடியும்.

- Advertisement -

பண்ட்க்கு கூடுதல் நெருக்கடி:

நடப்பு சீசனில் ரிஷப் பண்ட் 11 போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே 128 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இதில் அவருடைய சராசரி வெறும் 12 ஆகும். ஸ்ட்ரைக் ரெட் வெறும் 99 என்ற அளவில் பரிதாபமாக இருக்கின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், பந்த் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டன்சி என இரண்டு பொறுப்பையும் சேர்த்துக்கொண்டு பார்ப்பதால் அவருக்கு நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே பண்ட் தன்னுடைய விக்கெட் கீப்பிங் பொறுப்பையாவது பூரான் இடம் ஒரு இரண்டு போட்டிக்கு கொடுக்க வேண்டும்.

- Advertisement -

பூரானிடம் பொறுப்பை கொடுங்க:

இதன் மூலம் பேட்டிங்கில் தன்னுடைய ஆட்டத்தை அவரால் மீட்டெடுக்க முடியும். இதனால் பௌலர்களிடம் சென்று கேப்டனாக பேசவும் முடியும். விக்கெட் கீப்பரால் பில்டர்களை நிறுத்த முடியுமே தவிர வீரர்களிடம் சென்று பேச முடியாது.
எனவே தன்னுடைய விக்கெட் கீப்பிங் பணியை நிக்கோலஸ் பூரான் இடம் வழங்க வேண்டும் என்று பிஞ்ச் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் கேப்டனா கோலி வேண்டாம்?.. டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்.. பிசிசிஐ எடுத்த முடிவு.. வெளியான தகவல்கள்

தற்போது லக்னோ அணி  பிளே ஆப் ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கடினமாக மாறி இருக்கிறது. இன்னும் எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் மேலே இருக்கும் அணிகள் தோல்வி தழுவினால் மட்டுமே இலக்கு அணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும். இதனால் ரிஷப் பன்ட் தன்னுடைய ஃபார்மை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்.

- Advertisement -