மீண்டும் கேப்டனா கோலி வேண்டாம்?.. டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்.. பிசிசிஐ எடுத்த முடிவு.. வெளியான தகவல்கள்

0
394
Rohit

தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், அதே சமயத்தில் மூத்த வீரர் ஒருவரின் கேப்டன் விருப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய டெஸ்ட் அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் துவக்கம் என்பதால் இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிகவும் முக்கியமானது.

- Advertisement -

ரோகித் சர்மாவை விரும்பாத பிசிசிஐ

இந்த நிலையில் தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா தொடர்ந்து கேப்டனாக இருப்பதற்கு பிசிசிஐ விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை கேப்டனாக கொண்டு வந்தால் அவருடைய பேட்டிங் ஃபார்ம் பாதிக்கப்படும் பொழுது அவரை அணியில் இருந்து நீக்க முடியாது என பிசிசிஐ கருதுகிறது.

இந்த நிலையில் மூத்த வீரர் ஒருவர் கேப்டனாக இருப்பதற்கு விருப்பம் தெரிவித்தார் எனவும் ஆனால் அதை பிசிசிஐ நிராகரித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. அந்த மூத்த வீரர் விராட் கோலி, பும்ரா மற்றும் கேஎல்ராகுல் என மூவரில் ஒருவராக இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் அது யார் என்று செய்தியில் கூறப்படவில்லை. மேலும் பும்ரா காயமடை அதிக வாய்ப்புகள் இருப்பதால், அவருக்கு அங்கங்கு ஓய்வு தரப்பட வேண்டும் என்பதால், அவருக்கு கேப்டன் பதவி மட்டும் இல்லாமல் துணை கேப்டன் பதவி தருவதும் சரியாக இருக்காது என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்?

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணிக்கு இளம் வீரர்களில் ஒருவரை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும், அதற்கு சுப்மன் கில் தகுதியானவராக இருப்பார் என பிசிசிஐ நினைப்பதாகவும் செய்திகள் கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு நேரடியாக கில் கேப்டனாக கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க : மயங்க் யாதவ் பவுலிங்க்கு.. அந்த பிளான் நான் போடல.. ஸ்ரேயாஸ்தான் ஸ்கெட்ச் போட்டது – ரிக்கி பாண்டிங் வெளியிட்ட தகவல்

இதுகுறித்து வெளியாகியிருக்கும் செய்தியில் ” இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தொடர்ந்து ஒரு கேப்டன் உடன் இணைந்து வேலை செய்வதை விரும்புவார். எனவே அவருடன் நீண்ட காலம் இணைந்து வேலை செய்யக்கூடிய வகையில் இளம் வீரர் ஒருவரை கேப்டனாக கொண்டுவர முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அது கில்லாக இருப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -