ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வாழ்வா? சாவா ? என்ற கட்டத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இந்த தருணத்தில் மும்பை அணி ஏமாற்றி தான் வெற்றி பெற்றதாக கூறி சமூக வலைத்தளத்தில் பல்வேறு ரசிகர்களும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்கள். அதில் மிட்செல் சாட்ணர் வீசிய பந்தில் விப்ராஜ் நிகம் ஆட்டம் இழந்தார்.
ரசிகர்கள் புகார்:
ஆனால் அந்த பந்து நோபால் என ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதேபோன்று மற்றொரு டெல்லி அணி வீரரான அபிஷேக் போரெல் விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கல்டன் இருந்ததாகவும் நடுவர் தவறான முடிவை அறிவித்துவிட்டார் என்றும் ரசிகர்கள் சாடியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி விதிகளுக்கு மீறி செயல்பட்டதாக கூறி நடுவர் அபராதமாக நோபால் விதித்த சம்பவமும் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஐந்தாவது ஓவரில் மூன்றாவது பந்தில் வில் ஜாக்ஸ் வீசினார்.
அப்போது கேப்டன் ஹர்திக் பாண்டியா பில்டிங்கில் ஒரு தவறு செய்துவிட்டார்.
நடுவர்கள் வழங்கிய நோ பால்:
மூன்று வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். லெஃப்ட் சைடில் ஐந்து வீரருக்கு பதில் ஆறு வீரர்கள் நிற்கவைக்கப்பட்டிருந்தார்கள். இது விதிகளுக்கு மீறிய செயலாகும். இதனை கண்டுபிடித்த நடுவர் உடனடியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு நோபால் அபராதம் விதித்தார். இதேபோன்று ஸ்டம்ப்க்கு பின்னால் லெக் சைடில் இரண்டு வீரர்களுக்கு மேல் நிற்க வைக்க கூடாது என்ற விதியும் இருக்கிறது.
இதையும் படிங்க: ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட.. ஒவ்வொரு நாளும் 150 பேர் என்கிட்ட கேக்கறாங்க – பென் கட்டிங் சுவாரசிய பேட்டி
இந்த நோபாலை பயன்படுத்திக் கொண்டே விப்ராஜ் நிகம் சிக்ஸர் அடித்து அசத்தினார். இதை போன்ற அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசினார். எனினும் டெல்லி அணி 181 என்று இலக்கை எட்ட முடியாமல், வெறும் 121 மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கடைசி இரண்டு ஓவரில் 48 ரன்கள் விளாசியது, டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.






