தன்னை எல்லா அணியின் ரசிகர்களும் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடுவதற்கு தயாராக முடியுமா என்று தொடர்ந்து கேட்டு வருவதாக ஆஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் கூடியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
யார் இந்த பென் கட்டிங்?
இதே போல 2016 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு மிகச்சிறந்த வருடமாக அமைந்திருந்தது. அந்த ஆண்டு பேட்டிங்கில் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ், கெயில் என எல்லோரும் உச்சத்தை தொட்டு இருந்தார்கள். மேலும் அந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி அணி உறுதியாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ஹைதராபாத் அணிக்காக இறுதிப் போட்டியில் விளையாடிய பென் கட்டிங் பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 35 ரன்கள் விட்டு தந்து கெயில் மற்றும் கேஎல்.ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் மிக முக்கியமான நேரத்தில் கடைசி கட்டத்தில் 15 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் உடன் 39 ரன்கள் குவித்து ஆர்சிபியின் ஐபிஎல் கோப்பை கனவை தகர்த்தார்.
பென் கட்டிங் வெளியிட்ட தகவல்
இந்த ஆஸ்திரேலிய வீரரால் ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு தகர்ந்து போனது. இன்று வரையில் ஆர்சிபி அணி மற்றும் ரசிகர்களுக்கு ஒரு கெட்ட கனவாக பென் கட்டிங் இருந்திருக்கிறார். தற்பொழுது மீண்டும் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு வரக்கூடிய அளவில் இருப்பதால், இவரை மீண்டும் ஆர்சிபி அணிக்கு எதிராக மாற்று வீரராக ஐபிஎல் தொடருக்கு தயாராகி வர முடியுமா? என ரசிகர்கள் கேட்பதாக கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : 4-4.. இதுவரை எந்த அணிக்கும் நடக்காத வினோத சோகம்.. டெல்லிக்கு நடந்த பரிதாபம்.. முழு தகவல்கள்
இதுகுறித்து பென் கட்டிங் கூறும் பொழுது ” நான் இப்பொழுது இன்ஸ்டாகிராமில் என்னுடைய தனிப்பட்ட பதிவுகளை பதிவேற்றினால், ஒவ்வொரு நாளும் குறைந்தது 150 பேராவது வந்து ‘ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட, ஏதாவது ஒரு அணிக்கு உங்களை மாற்று வீரராக தயார்படுத்திக் கொள்ள முடியுமா?’ என்று கேட்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






