ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. மும்பை அணியின் நட்சத்திர வீரரான பும்ரா காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பும்ரா இல்லாதது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்த கருத்துக்களை தற்போது பார்க்கலாம். “பும்ரா தற்போது பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். அவர் காயத்தில் இருந்து மீண்டு வரும் பயணத்தை தொடங்கி விட்டார்.”
“பிசிசிஐ மருத்துவக் குழு அவருக்கு அனுமதி வழங்குகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது அனைத்தும் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அன்றைய நாளில் பும்ராவில் உடல் தகுதி எவ்வாறு முன்னேறுகிறது என்பதை பொறுத்து அமையும்.அவர் நல்ல உத்வேகத்துடன் இருக்கின்றார். பும்ரா அணியில் இல்லாதது நிச்சயமாக எங்களுக்கு மிகப்பெரிய சவால்தான்.”
” ஏனென்றால் உலகின் மிகச்சிறந்த பவுலர்களின் அவரும் ஒருவர். எங்கள் அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.பும்ரா இல்லை என்றால் மற்ற வீரர் அவருடைய இடத்தில் விளையாட ஒரு வாய்ப்பு ஏற்படும். இந்த வாய்ப்பை யார் சரியாக பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். பும்ரா இல்லாத நிலையில் புதிய விஷயங்களை பயன்படுத்திக் கொள்ள நாங்கள் முயற்சி செய்யப் போகிறோம்.”
“ஐபிஎல் தொடரில் தற்போது ஆரம்ப கட்ட போட்டிகள் தான் இது என்பதால் எங்களால் பல விஷயங்களை முயற்சி செய்து பார்க்க முடியும். அதற்குள் பும்ரா முழு உடல் தகுதியை எட்டி விரைவில் அனைத்து திரும்புவார் என நான் நம்புகிறேன்.” என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் பும்ரா 133 போட்டிகளில் விளையாடி 165 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. தெரியாமா ரூ.10 கோடி கொடுத்துட்டோமா? பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர முடியாமல் முழிக்கும் சிஎஸ்கே
பும்ரா கடந்த 2023 ஆம் ஆண்டு இதேபோல் காயம் காரணமாக ஒரு தொடர் முழுவதும் பங்கேற்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மும்பை அணியில் ட்ரெண்ட் பவுல்ட், தீபக் சாகர், ரீஸ் டோப்லி, கார்பன், ஹர்திக் பாண்டியா, அஸ்வினி குமார், சத்தியநாராயண ராஜு, அர்ஜுன் டெண்டுல்கர், ராஜ் பவா போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.