தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர் இருக்காங்க.. மத்தவங்களுக்கு கதையே வேற – ஹர்பஜன் சிங் பேச்சு

0
49
Harbhajan

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தோனிக்கு வருகின்ற ரசிகர்கள் மட்டுமே உண்மையானவர்கள் என்றும் மற்றவர்களுக்கு வரக்கூடியவர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்படக் கூடியவர்கள் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதை அடுத்து ரசிகர்கள் வெள்ளை டீ சர்ட் அணிந்து வந்திருந்தார்கள். இது சம்பந்தமாக ஆகாஷ் சோப்ரா உடன் இணைந்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிய ஹர்பஜன் சிங் சர்ச்சையான முறையில் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு மரியாதை

நேற்றைய போட்டி மழையால் கைவிடப்பட்டது. இருந்த போதிலும் ரசிகர்கள் வெள்ளை டீ சர்ட்டில் திரண்டு வந்து விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மேலும் இறுதி வரையில் மைதானத்திலிருந்து போட்டி நடக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருந்தார்கள். மேலும் விராட் கோலியின் உருவம் திரையில் வரும் பொழுது ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

இந்த நிலையில் இதற்கு முன்பாகவே தோனிக்கு வரக்கூடிய ரசிகர்கள் மட்டுமே அவருக்காக வருகிறார்கள் என்றும், மற்றவர்களுக்கு பணம் கொடுத்து ரசிகர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்று மேலோட்டமாக பேசியிருந்தார். தற்போது அவரது கருத்தை இன்னும் கொஞ்சம் விரிவாக கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து இதற்கு மேல் பேசினால் சரி வராது என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தோனியின் ரசிகர்கள்

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது “தோனியின் ரசிகர்கள் மட்டுமே உண்மையான ரசிகர்கள் மற்றவர்களின் ரசிகர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. நான் மீண்டும் சொல்கிறேன் யாருக்காவது உண்மையான ரசிகர்கள் இருந்தால் அது தோனிக்கு மட்டுமே இருக்கிறது. மீதமுள்ளவர்களின் ரசிகர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது”

இதையும் படிங்க : இப்ப உண்மைய சொல்றன்.. கோலி ஓய்வு பெற இந்த 2 விஷயம் தான் முக்கிய காரணம் – ரவி சாஸ்திரி தகவல்

“இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பாதி கட்டணம் கொடுத்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் மட்டுமே உண்மையான விசுவாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாம் மற்றவர்களுக்கு பார்க்கும் எங்கள் எல்லாம் உண்மையானது கிடையாது. நாம் மேற்கொண்டு அதைப் பற்றி பேசப் போனால் விவாதம் வேறு பக்கமாக திரும்பி விடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -