ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் சமபலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டிக்காக சிஎஸ்கே வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் போட்டியில் இருந்து மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் பும்ரா கடந்த ஆஸ்திரேலியா தொடரின் போது ஐந்தாவது டெஸ்டில் காயம் அடைந்தார்.
பும்ரா இல்லை:
அதன் பிறகு பும்ரா ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலில் இடம் பெற்ற பும்ரா பின் தம்மால் பங்கேற்க இயலாது என்று விலகினார். இந்த சூழலில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதனால் பும்ரா சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர்,” பும்ரா கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்திலும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார்.இன்னும் சொல்லப்போனால் பும்ரா பாதி ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் தான்”
ஹர்திக் பாண்டியாவுக்கு தடை:
“இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தான் அவர் தயாராகி வருகிறார். இதனால் பும்ரா இல்லாமல் தான் மும்பை அணி தயாராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.” மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஸ்லொ ஓவர்ரேட் காரணமாக 2 போட்டிகளில் பங்கேற்க தடை வாங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபிய இந்தியா ஜெயிக்க.. பைனல்ல ரோகித் செஞ்ச இந்த ஒரு மூவ்தான் காரணம் – வக்கார் யூனிஸ் விளக்கம்
இதன் காரணமாக மார்ச் 23ஆம் தேதி சிஎஸ்கே எதிரான ஆட்டத்திலும் மார்ச் 29ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் பங்கேற்க மாட்டார். இந்த சூழலில் பும்ராவும் இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தீபக் சாகர் தற்போது மும்பை அணியில் இருப்பதால் அவர் சிஎஸ்கே எதிரான ஆட்டத்தில் மிக முக்கிய பங்காற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.