ஐபிஎல் 2025..  டெல்லி அணியில் ராகுல், நடராஜனுக்கு புதிய பொறுப்பு.. பிளே ஆப்க்கு தகுதி பெறுமா?

0
12

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதில் டெல்லி அணி தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. 11 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் அந்த அணி இருக்கிறது. எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

இந்த சூழலில் டெல்லி அணி தங்களுடைய பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் ராகுல் தொடக்க வீரராக கடைசி மூன்று போட்டிகளிலும் களமிறங்க போகிறார். கேஎல் ராகுல் நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டியில் விளையாடி ஒரு முறை தொடக்க வீரராகவும், இரண்டு முறை நம்பர் மூன்றாவது வீரராகவும், ஏழு முறை நம்பர் நான்காவது வீரராகவும் பேட்டிங் வரிசையில் களமிறங்கி இருக்கிறார்.

- Advertisement -

தொடக்க வீர்ராக ராகுல்:

பத்து போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் மொத்தமாக 381 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 93 ரன்கள் ஆகும். நடப்பு தொடரில் ராகுல் மூன்று அரை சதம் அடித்திருக்கிறார். தொடக்க வீரர் ஜேக் பிரேசர் போதிய பார்மில் இல்லாமல் தடுமாறி வருகிறார். இதேபோன்று டுபிளசிஸ்க்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் தான் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது.  இதேபோன்று டெல்லி அணியின் பந்துவீச்சிலும் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் டெல்லி அணிக்கு நடப்பு தொடரில் சிறப்பாக பந்துவீசிய நிலையில் அவர் திரும்பி ஐபிஎல் தொடருக்கு வர மறுத்துவிட்டார்.

- Advertisement -

நடராஜனுக்கு புதிய பொறுப்பு:

இதன் காரணமாக தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இனி டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சுக்கு நடராஜன் தான் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று மோகித் சர்மா,  வங்கதேச வீரர் ரஹ்மான் பவுலிங் படையை கட்டமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி அணி வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. அதன் பிறகு மும்பைக்கு எதிராகவும், கடைசி போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராகவும் விளையாடுகிறது.

இதையும் படிங்க: ஆர்சிபி ரசிகர்கள் செய்த அதை ஏற்கவே முடியாது.. தல தோனி பாவம் இல்லையா – ராபின் உத்தப்பா விமர்சனம்

இதனிடையே டெல்லி அணியில் களமிறங்கிய முகேஷ் குமார் மற்றும் கருண் நாயர் ஆகியோர் இருவரும் ஐபிஎல் பிளே ஆப் தொடரிலிருந்து விலகி இருக்கிறார்கள். இந்த இருவரும் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த நிலையில் இருவரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் ப்ளே ஆப் சுற்றில் விளையாடாமல் இந்த இருவரும் இங்கிலாந்து தொடரில் விளையாட செல்கின்றனர்.

- Advertisement -