ஐபிஎல் 2025.. நம்மால் கண்டிப்பாக முடியும்.. இன்னும் தொடர் முடியவில்லை.. மும்பை வீரர்களுக்கு பும்ரா தந்த நம்பிக்கை

0
13

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் பத்து அணிகளும் பலமாக இருக்கிறது. இதனால் இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெறுவது என்பதே கடும் சவாலாக இருக்கிறது. இதன் காரணமாக தான் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக போராடியும் 222 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் அருகில் வந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை அணி தற்போது எட்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் மும்பைக்கு 9 போட்டிகள் இருக்கிறது. அதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப்க்கு  செல்ல முடியும்.  இந்த நிலையில் போட்டி முடிவடைந்த உடன் மும்பை அணி டிரெஸ்ஸிங் ரூமில் பும்ரா பேசிய வீடியோவை மும்பை அணி தற்போது வெளியிட்டு இருக்கிறது.

- Advertisement -

நிச்சயம் வெற்றி பெறுவோம்:

இது குறித்து பேசிய அவர், “மும்பை அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் நாம் தோற்று விட்டோம். டி20 கிரிக்கெட் இப்படிதான் செல்லும். இன்றும் நமக்கு தொடர் எஞ்சி இருக்கின்றது. நம்மால் கண்டிப்பாக முடியும் என்று நாம் நினைக்க வேண்டும்.”

“நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். ஏனென்றால் நாம் அபாரமான கிரிக்கெட்டை கடந்த சில போட்டிகளாக ஆடி வருகின்றோம். டெல்லியில் நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து புதியதாக ஆரம்பிப்போம். நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் அணிக்கு நாம் நிச்சயம் திருப்பு முனையை ஏற்படுத்துவோம்.”

- Advertisement -

பும்ரா ஏமாற்றம் அடைந்தார்:

“நம்மால் முடிந்ததை கண்டிப்பாக அணிக்கு நாம் செய்வோம் என்று பும்ரா வீரர்களிடம் பேசிய உரை சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி இருக்கிறது. பும்ரா குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே, போட்டி முடிவடைந்த உடன் நான் பும்ராவிடம் பேசினேன். அவர் நல்ல பாமில் இருக்கின்றார்.

இதையும் படிங்க: ஆர்சிபி அணியை தோற்கடிப்பதே ஆர்சிபி தான்.. மும்பைக்கு எதிரான வெற்றி குறித்து ராயுடு கருத்து

“எனினும் இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அவர் திரும்பி வந்தவுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். அது தவிர வேறு எதுவும் இல்லை. தற்போது மும்பை அணியின் வேகப்பந்துவீச்சு பலம் கொண்டிருக்கின்றது. நாங்கள் நல்ல முறையில் தான் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றோம். பும்ராவும் நல்ல முறையில் செயல்பட்டார். மூன்று மாதத்திற்கு பிறகு திரும்பினாலும் அவருடைய பந்து வீசும் முறை சிறப்பாக இருக்கிறது. இன்னும் நிறைய போட்டியில் விளையாட அவர் இன்னும் மேம்படுவார் என்று ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.”

- Advertisement -