ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி அபாரமாக விளையாடி வருகிறது. 4 போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. மூன்று போட்டியிலுமே கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணிலும் சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணிலும்,மும்பையை அதன் சொந்த மண்ணிலும் வீழ்த்திருக்கிறது.
இதன் மூலம் புள்ளி பட்டியலில் ஆர் சி பி அணி தற்போது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ராயுடு, “ஆர்சிபி அணியை பாராட்டி பேசி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ஆர்சிபி அணியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களிடம் இம்முறை நல்ல காம்பினேஷன் இருக்கின்றது.”
“நடப்பு ஐபிஎல் தொடரில் வெற்றி பெறாத அணிகளை எடுத்துக்கொண்டு பார்த்தால் அவர்கள் இன்னமும் எந்த வீரர்களை பயன்படுத்தலாம் என்று காம்பினேஷனை சரியாக செட் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர் சி பி, டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் தங்களுடைய வீரர்களின் காம்பினேஷனை அழகாக செட் செய்துவிட்டார்கள்.”
ஐபில் கோப்பையை வெல்லும் தகுதி இருக்கிறது:
“நான் எப்போதுமே ஆர் சி பி யின் கிரிக்கெட்டை ரசித்துப் பார்ப்பவர். நாம் ஆர் சி பி யின் தோல்வியை கிண்டல் செய்கின்றோம். ஏனென்றால் நாம் யாருமே டெல்லி அல்லது பஞ்சாப் குறித்து பேசக்கூட மாட்டோம். ஆர்சிபிஐ கிண்டல் செய்கிறோம் என்றால் அந்த அணியால் ஐபிஎல் கோப்பையை வெல்ல க்கூடிய தகுதி இருக்கின்றது.”
“ஆனால் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவுவது ஆர் சி பி வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆர்சிபி அணியை தோற்கடிக்க யாராலும் முடியாது. ஆனால் rcb அணியால் மட்டும்தான் அவர்களை தோற்கடிக்க முடியும். ஆனால் இம்முறை கேப்டனாக வந்திருப்பதால் rcb இம்முறை கோப்பையை வெல்லும் என்று நினைக்கின்றேன். ஆர் சி பி அணியின் மிகப்பெரிய பலமே இம்முறை புவனேஸ்வர் குமாரின் நான்கு ஓவரையும் முன்பே முடித்து விடுவது தான்.”
சிறப்பான மூவ்- ராயுடு பாராட்டு:
“ஏனென்றால் புவனேஸ்வர் குமாரை கடைசி இரண்டு ஓவர்களில் தான் மற்ற அணிகள் பயன்படுத்தியிருக்கிறது. ஆனால் தற்போது புவனேஸ்வர் குமாரை ஆர்சிபி முன்பே பயன்படுத்தி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. அது நிச்சயம் சிறந்த மூவ் என்று நான் கருதுகின்றேன்.”
இதையும் படிங்க: தோனி ரோகித் 2 பேருமே ஐபிஎல்க்கு தேவையில்ல.. நீங்களே இத பாருங்க – ரசிகர்கள் வைக்கும் ஆதாரம்
“இதே போன்று குர்னல் பாண்டியா ஹேசல்வுட், புவி ஆகிய மூன்று பவுலர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இம்முறை பனிப்பொழிவு இல்லை. இதன் காரணமாக பவுலர்கள் இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள்” என்று ராயுடு பாராட்டியுள்ளார்.






